ஜனாதிபதிதான் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைக்க வேண்டும்.. ராகுல் காந்தி

May 22, 2023,01:27 PM IST
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அல்ல, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் தற்போது உள்ள நாடாளுமன்றக் கட்டட வளாகம் 90 ஆண்டுகளைக் கடந்து விட்ட மிகப் பழமையான கட்டடமாகும். இதைத் தொடர்ந்து புதிய  நாடாளுமன்றம் அதி நவீனமாக பெரும் பொருட் செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து விட்டதைத் தொடர்ந்து மே 28ம் தேதி அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார். வீர சவர்க்கரின் பிறந்த நாளன்று இந்த திறப்பு விழா நடைபெறுகிறது.



இந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை  பிரதமர் மோடி திறந்து வைக்கக் கூடாது. மாறாக, குடியரசுத் தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார். 

முன்னதாக கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இந்த புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர  மோடி நாட்டினார். அதன் பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கின.  புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்  இடம் பெறும் லோக்சபா அரங்கில் 888 உறுப்பினர்கள் வரை அமர முடியும். அதேபோல ராஜ்யசபாக ட்டடத்தில்  380க்கும் மேற்பட்டோர் அமர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

news

ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்