லியோ ஹாட் அப்டேட்... எதிர்பார்ப்பை எகிற வைத்த தயாரிப்பாளர்

Jun 22, 2023,11:44 AM IST
சென்னை : விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் லியோ. ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ள லியோ பற்றிய பல ஹாட் அப்டேட்களை படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேசில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், படம் பற்றிய புதிய ஹாட் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் ரெடி பாடல் தற்போது தமிழில் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மொழிகளில் விரைவில் வெளியிடப்படும்.



இந்த பாடலில் துப்பாக்கி விஜய்யை நீங்க பார்க்கலாம். 100 சதவீதம் இது ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்ரீட்டாக அமையும். லியோ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம் ஜெர்மன் உள்ளிட்ட பல வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு, நெட்ஃபிளிக்சில் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

லியோ படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதால், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இன்னும் 15 நாட்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் லலித் குமார் தெரிவித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்