பவுலர்களில் அஸ்வின் டாப்.. பேட்ஸ்மேன்களில் ஜோ ரூட் தான் நம்பர் 1!

Jun 21, 2023,04:06 PM IST
துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில் தொடர்கிறார். பேட்டிங்கில் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரிவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஆர். அஸ்வின் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட அஸ்வினுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படி இருந்தும் கூட அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.



உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாமிக மோசமான தோல்வியைத் தழுவியது. ஒரு வேளை அஸ்வின் பந்து வீச வாய்ப்பளிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் மிகப் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் அவரால் ஏற்படுத்தியிருக்க முடியும் என்பது ரசிகர்களின் குமுறலாக உள்ளது.

அஸ்வின் 860 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார். இவர் 829 புள்ளிகளுடன் உள்ளார். இந்திய பவுலர்களில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் முறையே 8 மற்றும் 9வது இடத்தில் உள்ளனர். இவர்களது தரவரிசையிலும் மாற்றம் இல்லை. அப்படியே தொடர்கிறார்கள்.

பேட்டிங்கைப் பொறுத்தவரை இங்கிலாந்தின் ஜோ ரூட் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதுவரை அந்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசக்னே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்