ரூ.2000 நோட்டு திரும்ப பெற இது தான் காரணம்.. ரிசர்வ் வங்கி விளக்கம்

May 20, 2023,09:30 AM IST

டெல்லி :  ரூ. 2000 நோட்டு ஏன் திரும்பப் பெறப்படுகிறது என்பதற்கு ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது.

2016 ம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று மாலை அறிவித்தது. தற்போதுள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள இந்த ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி சார்பில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. 

அதில், இந்திய டிஜிட்டல் பணபரிவர்த்தனை ஆண்டு அறிக்கையின் படி யூபிஐ பணபரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை கடந்த சில ஆண்டுகளாக கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. யூபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார், மொபைல், பிரிபெய்டு கார்டுகள் வழியாக 2022 ம் ஆண்டு மட்டும் ரூ.14 .92 லட்சம் கோடி மதிப்பிலான 87.92 பில்லியன் பணபரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இதனால் ரூ.2000 நோட்டு திரும்பப் பெறப்படுகிறது.



clean note policy அடிப்படையில் வங்கிகள் மூலம் பொது மக்களுக்கு உயர் தரத்திலான ரூபாய் நோட்டுக்களை வழங்குவதற்காக ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான ரூ.2000 நோட்டுக்கள் 2017 ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன் வெளியிடப்பட்டவையாகும். அதன் வாழ்நாள் காலமான 4 முதல் 5 ஆண்டுகளை எட்டி விட்டதால் அவற்றை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

2018 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளிவிபரத்தின் படி ரூ.6.73 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. இவை தற்போது பாதியாக குறைந்து விட்டன. 2023 ம் ஆண்டு மார்ச் 31 புள்ளி விபர கணக்கின் படி ரூ.3.62 லட்சம் கோடி ரூ.2000 நோட்டுக்கள் மட்டுமே, அதாவது 10.8 சதவீதம் நோட்டுக்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இப்படி புழக்கத்தில் குறையும் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவது ஒன்றும் புதியதல்ல. இதே போல் 2013-2014 லும் திரும்பப் பெறப்பட்டது. 2014 ம் ஆண்டு ஜனவரி மாதம், 2005 ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட அத்தனை ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது என ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்