ரூ.2000 நோட்டு வாபஸ்... இதுவரை எவ்வளவு ரூபாய் திரும்ப வந்திருக்கு?

Jul 05, 2023,10:28 AM IST
டெல்லி :  ரூ. 2000 நோட்டு எவ்வளவு திரும்ப வந்துள்ளது என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

உயர் பண மதிப்பு கொண்ட ரூ.2000 நோட்டுக்களை திரும்ப பெறுவதாக இந்த ஆண்டு மே 19 ம் தேதியன்று மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. தடை செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள செப்டம்பர் 30 ம் தேதி வரை காலக் கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் மக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் அல்லது வங்கி கணக்கில் முதலீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த அறிவிப்பை ஆர்பிஐ வெளியிட்ட மே 19 ம் தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை ரூ.2.72 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வங்கிக்கு வப்துள்ளதாக ஆர்பிஐ அறிவித்துள்ளது. ஆர்பிஐ வெளியிட்டுள்ள புள்ளி விபர கணக்கின் படி ஜூன் 30 ம் தேதி கணக்கின் படி ரூ.0.84 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளது.

அதாவது 76 சதவீதம் அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. மார்ச் 31 ம் தேதி கணக்கின் படி 3.62 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. மே 19 கணக்கீட்டின் இது ரூ.3.56 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. 

பல்வேறு வங்கிகளில் இருந்து பெறப்பட்ட புள்ளி விபரத்தின் படி, இதுவரை திரும்ப பெறப்பட்ட ரூ.2000 நோட்டுக்களில் 87 சதவீதம் நோட்டுக்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 13 சதவீதம் நோட்டுக்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்