டில்லி : ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக அறிவித்த 20 நாட்களுக்கு உள்ளாகவே புழக்கத்தில் இருந்த 50 சதவீதம் ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக மே 19 ம் தேதி மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆர்பிஐ விளக்கம் அளித்தது. செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ள கடைசி தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்ட நடவடிக்கை குறித்து சக்திசந்த தாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூ.2000 நோட்டுக்கள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்ட பிறகு 85 சதவீதம் நோட்டுக்கள் வங்கி சேமிப்பிற்கு திரும்ப வந்துள்ளன. இதுவரை ரூ.1.8 லட்சம் கோடி மதிப்பிலான பணம் திரும்ப வந்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை ரூ.3.62 லட்சம் கோடி அளவிலான ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன.
கடைசி நிமிட கூட்ட நெரிசலை தவிர்க்கும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ரிசர்வ் வங்கியிடம் போதிய ரூபாய் நோட்டுக்கள் உள்ளன என்றும் சக்திகந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}