டெல்லி : ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு 2023 ம் ஆண்டு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரூ.2000 நோட்டுக்கள் பயன்படுத்துவதை வங்கிகள் நிறுத்த வேண்டும் எனவும் ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. ரூ.2000 நோட்டுக்கள் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

2016 ம் ஆண்டு நவம்பர் 8 ம் தேதி கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பின் போது ரூ.500, 1000 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றது. அதற்கு பிறகு, அதற்கு மாற்றாக ரூ.2000 நோட்டுக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன. புதிய 500 ரூபாயும் அறிமுகமானது. 2016 ம் ஆண்டு நவம்பர் 10 ம் தேதி முதல் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றன.
ஆனால் சில ஆண்டுகளாக இந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து மறைந்து விட்டது. யாரிடமும் 2000 ரூபாய் நோட்டு இல்லை. வங்கிகளும் அதை விநியோகிப்பதில்லை. இதனால் மக்கள் குழப்பமடைந்தனர். அப்போதுதான் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதையே ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது என்று தெரிய வந்தது. இந்த நிலையில் தற்போது அந்த நோட்டை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. க்ளீன் நோட் பாலிசி அடிப்படையில் இந்த 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரூ.2000 நோட்டுக்களை கைகளில் வைத்திருப்போர் தங்களின் வங்கிகளுக்கு சென்று தங்களின் கணக்கில் சேமித்து கொள்ளலாம் அல்லது மாற்றிக் கொள்ளலாம். வங்கிகளின் வழக்கமான வேலைகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் ரூ.20,000 வரையிலான தொகையை மே 23 ம் தேதி முதல் வங்கியின் வேலை நேரத்தின் போது நேரடியாக சென்று மாற்றிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதம் பார்லிமென்ட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த தகவலின் படி, 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வரை ரூ.9.512 லட்சம் அளவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன. 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு ரூ.27.057 லட்சம் கோடி ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}