சட்டென்று மாறிய வானிலை.. 12 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு!

May 21, 2023,10:51 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் குறைந்து மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 12 மாவட்டங்களில் இன்று கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திர காலம் உச்சத்தில் இருக்கிறது. வெயில் வெளுத்தெடுப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் வெயில் உக்கிரமாக இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சென்னையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. கடற் காற்று நகருக்குள் வீசி வருவதால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.




இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளது. இதனால் சென்னை நகரிலும் சற்று வெயில் தணிந்து லேசான காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 24ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரைப் பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு லேசான மேகமூட்டத்துடன் வானம் காணப்படும். வெயில் 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்