ஜெயிலர் ரிலீஸ் தேதி சொல்லியாச்சு.. அடுத்தடுத்து வரப் போகும் அப்டேட்ஸ்

May 08, 2023,12:59 PM IST
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் எழுதி, இயக்கி உள்ள படம் ஜெயிலர். ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷரோஃப், தமன்னா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். 

காமெடி, ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான தமிழில் ரஜினி, மலையாளத்தில் மோகன்லால், கன்னத்தில் சிவராஜ்குமார் ஆகியோர் ஒரே படத்தில் இணைந்து நடித்துள்ளதால் இந்த படம் ரசிகர்களால் அதிக ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது.



இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளது கூடுதல் பிளசாக உள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினி, சன் பிக்சர்ஸ், அனிருத் கூட்டணி இணைந்துள்ள அடுத்த படம் இதுவாகும்.

ஜெயிலர் படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து களைத்து விட்ட நிலையில் சத்தமில்லாமல் ஒட்டுமொத்த படத்தை எடுத்து முடித்து, மாஸான வீடியோவுடன் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது. ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசாக உள்ளதை, படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர், நடிகைகளையும் உள்ளடக்கிய வீடியோவுடன் படக்குழு வெளியிட்டுள்ளது. "தயாராகிக் கொள்ளுங்கள்...அவர் வருகிறார்....ஜெயிலர் ஆகஸ்ட் 10 முதல்" என்ற கேப்ஷனுடன் ட்விட்டரிலும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.  

படத்தின் ப்ரீப்ரொடக்ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டு விட்டதால் இனி டீசர், டிரைலர், ஃபர்ஸ்ட் சிங்கிள் உள்ளிட்டவைகளை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்