அயோத்தி படத்தை தலைவரே பாராட்டிருக்காரு... கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்

Apr 11, 2023,12:26 PM IST
சென்னை : சசிகுமார் நடித்த அயோத்தி படத்தை பார்த்து விட்டு, தனது பாராட்டுக்களை ட்விட்டரில் கருத்தாக பதிவிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இதனை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அறிமுக டைரக்டர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார், புகழ் நடித்துள்ள படம் அயோத்தி. இந்த படம் சமீபத்தில் ரிலீசானது. மனித உணர்வுகளையும், வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். அயோத்தியை சேர்ந்த வட இந்திய குடும்பம் ஒன்று தீபாவளியை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு ஆன்மிக சுற்றுப்பயணம் வருகிறது. வந்த இடத்தில் நடந்த ஒரு விபத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்த பெண், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழக்கிறார்.



தாயை இழந்து நிற்கதியாக நிற்கும் இரண்டு குழந்தைகளையும், உயிரிழந்த பெண்ணின் உடலையும் சொந்த ஊருக்கு கொண்டு சேர்க்கும் நபராக சசிகுமார் நடித்துள்ளார். சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த கார் டிரைவராக புகழும், அவரின் நண்பராக சசிகுமாரும் நடித்துள்ளனர். மனித உணர்வுகளை, நிஜ சம்பவங்களை மிக அற்புதமாக ஒன்று சேர்த்து ஒரு கதையை உருவாக்கி, அதை படமாக்கி உள்ளனர். இந்த படம் ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை பார்த்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், அயோத்தி...நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றி படம். முதல் படத்திலேயே தான் ஒரு தலை சிறந்த இயக்குநர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர்.மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுகளும், வாழ்த்துகளும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்த டிவீட்டைப் பார்த்து சசிக்குமார் நெகிழ்ந்து போய் விட்டார். உடனே பதிலும் கொடுத்துள்ளார். அதில், நடிகர் எனக் குறிப்பிடாமல், நண்பர் என்று சொன்னதிலேயே மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன் சார். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், மிக எளிய படைப்பாக வந்திருக்கும் #அயோத்தி படத்தை பார்த்துப் பாராட்டியது நல்ல படைப்புகளுக்கான பெரிய நம்பிக்கை கொடுக்கிறது  மிக்க நன்றி சார் என்று கூறியுள்ளார்.

ரஜினியே பாராட்டி உள்ளதால் ரஜினி ரசிகர்களும் இந்த படத்தை பார்த்து விட்டு, தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தலைவரே பாராட்டுவது என்றால் சும்மாவா என பலரும் கமெண்ட் செய்துள்ளனர். சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த விடுதலை முதல் பாகம் படத்தை பார்த்து விட்டு ட்விட்டரில் பாராட்டிய ரஜினி, விடுதலை படக்குழுவையும் சந்தித்து தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ரஜினி பாராட்டியதையும், அதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார் சூரி. 

விடுதலை படத்தை தொடர்ந்து அயோத்தி படத்தையும் ரஜினி மனம் திறந்து பாராட்டி உள்ளார். இது போன்ற சிறிய நடிகர்கள் படங்களையும் பார்த்து விட்டு, மனம் திறந்து பாராட்டும் ரஜினியின் குணத்தை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

உண்மையில் அயோத்தி படம் சூப்பராக இருக்கிறது.. மறக்காம பாருங்க.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்