ரஜினியின் அடுத்த படம்... மாஸாக வெளியான தகவல்!

May 08, 2023,10:47 AM IST
சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்ததாக நடிக்க உள்ள படங்கள் பற்றிய மாஸான தகவல்கள் வெளியாகி, சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ள ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டதாக தகவல் வெளியானதுமே தலைவர் 170, தலைவர் 171 என ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் பரவலாக உலா வருகிறது.

ஆனால் லேட்டஸ்ட் தகவலின் படி, ஜெயிலர் படத்தை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிப்பதற்காக தான் ரஜினி தற்போது தயாராகி வருகிறாராம். இந்த படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் தான் நடிக்க உள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் இஸ்லாமியர் கேரக்டரில் ரஜினி நடிக்கிறார். ரஜினியின் தங்கையாக ஜீவிதா ராஜசேகர் நடிக்கிறார். கிட்டதட்ட 33 வருடங்களுக்கு பிறகு லால் சலாம் படத்தின் மூலமாக பெரிய திரைக்கு நடிக்க வந்துள்ளார் ஜீவிதா.





லால் சலாம் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்பதற்காக விஷ்ணு விஷால் சமீபத்தில் தான் மும்பை புறப்பட்டு சென்றார். விரைவில் ரஜினியும் மும்பை செல்ல உள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ள உள்ளார். விளையாட்டு துறை சார்ந்த இந்த படத்தில் விக்ரந்த்தும் நடிக்கிறார். இவர் கிரிக்கெட் வீரர் ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தை தொடர்ந்து தலைவர் 170 படத்திற்காக ரஜினி தயாராக போவதாக சொல்லப்படுகிறது. தலைவர் 170 படத்திற்கு பல டைரக்டர்களின் பெயர்கள் பேசப்பட்டு வருகிறது. அதோடு தலைவர் 171 படத்தை இயக்க லோகேஷ் கனகராஜிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்