தான் வேலை செய்த பஸ் டிப்போவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ரஜினிகாந்த்

Aug 29, 2023,01:28 PM IST
பெங்களூரு : பெங்களூருவில் தான் வேலை செய்த பஸ் டிப்போவிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து, அங்குள்ளவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

தற்போது ஜெயிலர் படத்தின் படத்தின் வெற்றிக்கு பிறகு, யாரும் எதிர்பாராத வகையில் பல இடங்களுக்கும் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் இமயமலை சென்று விட்டு திரும்பும் வழியில் உத்திர பிரதேசத்திற்கு சென்று, அம்மாநில முதல்வரை சந்தித்து, அவரது காலில் விழுந்து வணங்கினார். பிறகு அம்மாநில அமைச்சர்கள் சிலருடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்த்த ரஜினி, அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு சென்று பார்த்தார்.



சமீபத்தில் சென்னை திரும்பி ரஜினி, தனது அடுத்த படங்களுக்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள், யார் தயாரிக்க போகிறார்கள் என இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இன்று பெங்களூருவின் தான் ஆரம்ப காலத்தில் வேலை செய்த பெங்களூருவில் ஜெயநகராவில் உள்ள பெங்களுரு போக்குவரத்து கழக பணிமனைக்கு திடீரென சென்றார் ரஜிஜி. ரஜினியை சற்றும் எதிர்பாராத அங்கிருந்தவர்கள் பரபரப்பாகினர். அங்கிருந்த டிரைவர், கன்டெக்டர்களுடன் ரஜினி சிரித்து பேசி மகிழ்ந்தார். அவர்களுடன் போட்டோவும் எடுத்துக் கொண்டார். பலர் ரஜினியுடன் சேர்ந்த செல்ஃபி எடுத்துக் கொண்டனர். 



மூத்த தொழிலாளர்கள் பலர் ரஜினியின் காலில் விழுந்து ஆசியும் பெற்றனர். கோடி கோடியாக சம்பாதித்து, சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தான் கன்டெக்டராக பணியாற்றியதை மறக்காமல் தற்போது மீண்டும் அங்கு சென்று, அங்குள்ளவர்களை சந்தித்ததற்கு ட்விட்டரில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. டிரைவர், கன்டெக்டர்களுடன் ரஜினி எடுத்துக் கொண்ட போட்டோக்கள் தீயாய் பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்