ரூ.2000 நோட்டுக்களை ஈஸியாக மாற்றலாம்.. வதந்திகளை நம்பாதீங்க.. எஸ்பிஐ அறிவிப்பு

May 22, 2023,01:16 PM IST
டெல்லி : ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவது தொடர்பாக சோஷியல் மீடியாவில் பரவி வரும் தவறான தகவல்களை பொது மக்கள் யாரும் நம்ம வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ள எஸ்பிஐ வங்கி, ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது தொடர்பான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்தது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கு செப்டம்பர் 30 ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் மாற்றுவதற்கு படிவத்தை பூர்த்தி செய்து, அதோடு ஆதார் போன்ற அடையாள சான்றை அளிக்க வேண்டும் என சோஷியல் மீடியாக்களின் தகவல் பரவியது.



இதனையடுத்து இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவதற்கு எந்த அடையாள சான்றும் அளிக்க வேண்டியது கிடையாது. ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கும், டெபாசிட் செய்வதற்கும் எந்த அளவு கட்டுப்பாடும் கிடையாது. 

ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை எத்தனை முறை வேண்டுமானாலும் வரிசையில் நின்று மாற்றிக் கொள்ளலாம். ஒருமுறை வரிசையில் நின்று ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றி விட்டு, மீண்டும் அதே வரிசையில் நின்று ரூ.20,000 வரையிலான நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். ஒரு நாளில் இத்தனை முறை தான் வர வேண்டும், இவ்வளவு தொகை தான் மாற்ற முடியும் என்ற அளவு கிடையாது என எஸ்பிஐ வங்கி பொது மக்களுக்கு தெளிவுபடுத்தி உள்ளது.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் மட்டுமல்ல, வாடிக்கையாளர் அல்லாதவர்களும் எந்த வங்கி கிளைக்கு வேண்டுமானாலும் சென்று  ரூ.20,000 வரையிலான ரூ.2000 நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுக்களை மாற்றுக் கொள்வதற்கு தனியாக கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்