எல்லோரும் ஷுப்மன் கில்லைப் பார்த்துக் கொண்டிருந்தபோது.. சாய் செய்த செய்கை!

May 30, 2023,09:23 AM IST
அகமதாபாத்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் ஷுப்மன் சிங் கில்தான் அதிரடி காட்டுவார். சாஹா வெளுப்பார்.. ஹர்டிக் பட்டையைக் கிளப்புவார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது சத்தம் போடாமல் சத்தாய்த்து விட்டுப் போய் விட்டார் சாய் சுதர்ஷன்.

இந்த ஐபிஎல் சீசனில் சாய் சுதர்ஷனின் ஸ்டிரைக் ரேட் மிகவும் மோசமாக இருந்தது.  எனவே அவர் மீது இறுதிப் போட்டியில் யாருக்கும் எந்த எதிர்பார்ப்பும் இல்லை.  அத்தனை பேரின் கவனமும் ஷுப்மன் கில் மீதுதான் குவிந்து கிடந்தது. இந்த இறுதிப் போட்டியில் அவர் சதம் அடிப்பாரா.. சென்னையை வீழ்த்துவாரா என்றுதான் பலரும் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தனர்.



காரணம், இந்த சீசனில் ஷுப்மன் கில் அதிரடி ஆட்டத்தைக் காட்டியிருந்தார். 800 ரன்களுக்கு மேல் குவித்து அனைவரையும் அதிர வைத்திருந்தார். அதேபோல சாஹா,ஹர்டிக் பாண்ட்யா என்றுதான் பலரும் கவனம் செலுத்தி வந்தனர். சுதர்ஷன் மீது அதிக எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் ந���ற்று அவரது ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்து.. ஒரு கட்டத்தில் பேயாட்டம் ஆடத் தொடங்கியபோது அத்தனை பேரும் மிரண்டு போய் விட்டனர்.

சிஎஸ்கே கேப்டன் தோனியே, சுதர்ஷன் அடித்த அடியைப் பார்த்து சற்று ஆச்சரியப்பட்டுப் போனார். அவரது முக பாவனைகளே இதைக் காட்டியது. மிகப் பிரமாதமான பேட்டிங்கை நேற்று வெளிப்படுத்தினார் சுதர்ஷன்.  47 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 96 ரன்களை விளாசினார். கடைசி ஓவரில் இவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவுட்டாகி விட்டார். ஆனால் குஜராத் அணியை 200 ரன்களுக்கு கொண்டு வந்து சேர்த்து விட்டுத்தான் ஆட்டமிழந்தார் சுதர்ஷன்.

6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளை விளாசிய சுதர்ஷன், தனது திறமை என்ன என்பதை நேற்று ஒரே போட்டியில் வெளிப்படுத்தி விட்டார். அத்தனை விமர்சகர்களின் வாய்களையும் அடைத்து விட்டார். கூடவே ஒரு சாதனையும் படைத்து விட்டார். 

ஐபிஎல் இறுதிப் போட்டியில் பிரபலம் ஆகாத ஒரு வீரர்  அதிக ரன்களைக் குவித்த சாதனைதான் அது. இதற்கு முன்பு 2014 இறுதிப் போட்டியில் மனீஷ் திவாரி 94 ரன்களைக் குவித்திருந்தார். அதை தற்போது சுதர்ஷன் முறியடித்து விட்டார்.

மேலும் 21 வயதாகும் சாய் சுதர்ஷன், இறுதிப் போட்டியில் 50 ரன்களுக்கு மேல் எடுத்த 2வது இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஜாம்பவான் வீரர்கள் கூட நிகழ்த்த முடியாத சாதனையை ஜஸ்ட் லைக் தட் சுதர்ஷன் முடித்து விட்டுப் போயிருப்பது வேற லெவல் செய்கை என்பதில் சந்தேகமே இல்லை.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்