அசுர வேகத்தில் வசூல் வேட்டை நடத்தும் பதான் : 5 நாட்களில் ரூ.542 கோடி வசூல்

Jan 31, 2023,12:10 PM IST
மும்பை : ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான பதான் படம் கடந்த 5 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.542 கோடிகளை வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.



ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம் நடித்த பதான் படம் ஜனவரி 25 ம் தேதி ரிலீசானது. கொரோனா சமயத்திலேயே துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங், ரசிகர்களின் நீண்ட கால காத்திற்குப்பிற்கு பிறகு தற்போது ரிலீசாகி உள்ளது. இந்தி மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்து வெளியிடப்பட்டது. அனைத்து மொழிகளிலும் இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட பதான் படம் கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.542 கோடிகளை வசூல் செய்துள்ளது. பாலிவுட்டில் ரிலீசாகும் படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை சந்தித்து வந்த நிலையில் பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றி, பாலிவுட்டிற்கு புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

பதான் படத்தின் சக்சஸ் மீட் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடமச் பேசிய ஷாருக்கான், இந்திய சினிமாவிற்கே மீண்டும் வாழ்க்கை கொடுத்துள்ளீர்கள். அதற்காக ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி என உருக்கமாக பேசி உள்ளார். தாமதமாக ரிலீசான போதிலும் அதற்கு அமோக ஆதரவு அளித்துள்ள ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் கூறி உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்