தாத்தா சித்தராமையா போலவே.. அவரது பேரனும் பாஸ் ஆயிட்டாப்ள.. இது சூப்பர்ல!

May 22, 2023,09:10 AM IST
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரும் ஆகி விட்ட சித்தராமையாவுக்கு இரட்டிப்பு சந்தோஷமாக அவரது பேரன் பிளஸ்டூ பாஸாகியுள்ளார்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் இமாலய வெற்றி பெற்றுள்ளது. 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் அங்கு ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையா 2வது முறையாக பதவியேற்றுள்ளார். சமீபத்தில்தான் பதவியேற்பு விழா கோலாகலமாக நடந்தது.

இந்த நிலையில் சித்தராமையா குடும்பத்தில் இன்னொரு சந்தோஷம் அரங்கேறியுள்ளது. அது அவரது பேரன் பிளஸ்டூ முடித்துள்ளார். நல்ல மதிப்பெண்களுடன் அவர் தேர்ச்சி அடைந்துள்ளார். பெங்களூரில் உள்ள கனடியன் சர்வதேச பள்ளியில்தான் அவர் பிளஸ்டூ படித்தார்.



பிளஸ்டூ தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழியனுப்பும் விழா அந்தப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. அதில் சித்தராமையாவும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதுகுறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார் சித்தராமையா.

அதில், எனது பேரன் பிளஸ்டூ முடித்துள்ளார். இதையொட்டி அவரது பள்ளியில் பிளஸ்டூ முடித்தவர்களுக்கு பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதில் நானும் கலந்து கொண்டேன். எனது பேரனையும் வாழ்த்தினேன் என்று கூறியுள்ளார் சித்தராமையா.

சித்தராமையாவின் அதிரடி உத்தரவுகள்

இதற்கிடையே, சித்தராமையா சில அதிரடி உத்தரவுகளை காவல்துறைக்கும், கட்சியனருக்கும் பிறப்பித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:

பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளும்போது இனிமேல் மாலைகல்  போடுவது, சால்வைகள் போடுவது போன்றவற்றை ஏற்க மாட்டேன். எனவே யாரும் எனக்கு மாலை, சால்வை போட முயலாதீர்கள்.  எனது அலுவலகத்திற்கோ, வீட்டுக்கோ, பொது நிகழ்ச்சிக்கோ என்னைப் பார்க்க வருவோர் இதைத் தவிர்க்க வேண்டும்.

என் மீது அன்பைக் காட்ட விரும்பினால், மரியாதை செலுத்த விரும்பினால் அதை புத்தகங்களாக கொடுங்கள். சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறேன்.

இதேபோல  சாலைப் போக்குவரத்தை எனக்காக நிறுத்தி வைக்க வேண்டாம் என்று பெங்களூரு காவல்துறை ஆணையரைக் கேட்டுக் கொண்டுள்ளேன். என்னால் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது. எனவே முதல்வரின் கார் போக்குவரத்துக்காக பொதுமக்களின் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளேன் என்று கூறியுள்ளார் சித்தராமையா.

ஆரம்பம் அமர்க்களமாகத்தான் இருக்கிறது.. போகப் போக பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்