சென்னை : நடிகர் தனுஷ் தற்போது டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த மாத இறுதிக்குள் படத்தின் முழு படப்பிடிப்பையும் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் தனுஷ் அடுத்ததாக நடிக்க உள்ள அவரின் 50 வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், பெரிய பட்ஜெட் படமாக இந்த படம் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கடந்த சில வாரங்களாக சோஷியல் மீடியாக்களில் தகவல் பரவி வந்தது. இதனால் தனுஷை அடுத்து இயக்க போவது யார்? சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்க போகிறது என அனைவரும் ஆர்வமாக கேட்டு வந்தனர்.
இந்நிலையில் தனுஷின் 50 வது படம் பற்றிய அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நேற்று (ஜூலை 05) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. போஸ்டருடன் வெளியான இந்த அறிவிப்பில் சன் பிக்சர்ஸ் வழங்கு, டி 50 என குறிப்பிட்டு, எழுத்து - இயக்கம் தனுஷ் என போடப்பட்டுள்ளது. விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை விட, சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள போஸ்டர் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
வெள்ளை நிற பேக்கிரவுண்டில் ரத்த சிவப்பு நிறத்தில் கோடுகள், பிளாக் அண்ட் ஒயிட்டில் கரடுமுரடான பாறைகளின் மீது தனுஷ் பின்னால் திரும்பி நிற்பது போது அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த இடத்தில் தனுஷ் இருப்பது போல் கட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை பார்த்து விட்டு ரசிகர்கள் பலர், என்ன இன்னொரு கேஜிஎஃப் எடுக்க போறாங்களா? இந்த போஸ்டரை பார்த்தால் ராக்கி பாய் அளவிற்கு ஒரு கேரக்டரில் தனுஷ் நடிக்க போறாரா என கேட்டு வருகின்றனர்.
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
{{comments.comment}}