தமிழக அமைச்சரவை மாற்றம்.. டிஆர்பி ராஜா அமைச்சரானார்.. பிடிஆர் இலாகா மாற்றம்

May 11, 2023,11:29 AM IST
சென்னை : தமிழ்நாடு அமைச்சரவையில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அதேபோல, நிதியமைச்சராக இருந்து வந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் இலாகா மாற்றப்பட்டு அவரது இலாகா தங்கம் தென்னரசுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் செய்த ஊழல்கள் பற்றி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியிட்ட ஆடியோ ஆகியவற்றால் தமிழக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என சொல்லப்பட்டு வந்தது. அதோடு சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கி விட்டு, புதியவர்களுக்கு அமைச்சரவையில் இடம் தர திமுக தலைமை முடிவு செய்திருப்பதாக சொல்லப்பட்டது.



இந்நிலையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா  பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று பதவியேற்பு விழா ராஜ்பவனில் நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர். என். ரவி புதிய அமைச்சருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதி, மனிதவள மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த எம்.பி.சாமிநாதனின் இலாகா மாற்றப்பட்டு அது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அளிக்கப்ட்டுள்ளது. மு.பெ.சாமிநாதன் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக செயல்படுவார். சா.மு.நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை மனோ தங்கராஜிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலாகா மாற்ற விவரம்:

1. டிஆர்பி ராஜா - தொழில்துறை
2. தங்கம் தென்னரசு - நிதித்துறை
3. எம்.பி.சாமிநாதன் - தமிழ் வளர்ச்சித்துறை
4. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்ப துறை
5. மனோ தங்கராஜ் - பால்வளத்துறை

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்