தரமான சம்பவம் காத்திருக்கு.. பிடிஎஸ் போட்டோவுடன் ஜெயிலர் அப்டேட் கொடுத்த தமன்னா

May 29, 2023,10:30 AM IST
சென்னை :  நடிகை தமன்னா ஜெயிலர் படம் தொடர்பான அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களின் மனதை எகிற வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் ஆகஸ்ட் 10 ம் தேதி ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்து விட்டார்கள்.



ஜெயிலர் படத்திற்காக தான் நடிக்க வேண்டிய பகுதிகள் அனைத்தையும் ஏற்கனவே முடித்து விட்டு ரஜினி, ஜூன் மாதம் டப்பிங் வேலைகளையும் துவங்க உள்ளார். ஆனால் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்த படத்தில் முக்கியமான ரோலில் நடிக்கும் தமன்னா, ஜெயிலர் படத்தில் பாடல் ஒன்றிற்காக ஒத்திகை நடக்கும் போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். அதோடு, "ஜெயிலர் படம் புயலுக்கு முன் வரும் அமைதி" என கேப்ஷனும் பதிவிட்டுள்ளார். ஜானி மாஸ்டர் இயக்கும் இயக்கும் இந்த பாடல் தான் பிரம்மாண்ட பாடலாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

லேட்டஸ்டாக வெளியாகி உள்ள தகவலின் படி, தமன்னா பகிர்ந்துள்ள இந்த பாடலுடன் ஜெயிலர் படத்தின் ஒட்டு மொத்த ஷூட்டிங்கும் நிறைவடைகிறதாம். ஜூன் இரண்டாவது வாரத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.

ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் ஜெயிலர் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளதாம். ஆகஸ்ட் 10 ம் தேதி ஜெயிலர் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். 

ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சிவராஜ்குமார், மோகன்லால், சுனில் ஷெட்டி, ஜாக்கி ஷெராஃப் தமன்னா, வசந்த ரவி, யோகி பாபு, விநாயகன், ரம்யா கிருஷ்ணன், கிஷோர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்