"ஐசியூ"வில் செந்தில் பாலாஜி.. மொத்தம் 3 தப்பு.. வட்டம் போட்டுக் குட்டிய செல்வக்குமார்!

Jun 15, 2023,12:01 PM IST
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதானது முதல் தொடர் குஷியில் இருந்து வருகிறது பாஜக. இந்த நிலையில்,  செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் திமுக தரப்பில் உள்ள ஓட்டைகளையும் அவர்கள் சமூக வலைதளங்களில் புட்டுப் புட்டு வைத்து வருகின்றனர்.

பண மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி வீடுகள் உள்ளிட்ட இடங்களில் தொடர் ரெய்டுகளை நடத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், அதன் தொடர்ச்சியாக அவரைக் கைது செய்தனர். இரவோடு இரவாக அவர் கைது செய்யப்பட்டதாலும், கைதுக்குப் பிறகு நெஞ்சு வலிப்பதாக கூறி செந்தில் பாலாஜி கதறி அழுத வீடியோ வெளியாகியதாலும் இது நாடு முழுவதும் பரபரப்பாகி விட்டது.



இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனைக்குப் போய், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியைச் சந்தித்த காட்சி தொடர்பான புகைப்படங்கள் நேற்று வெளியாகியிருந்தன. அந்தப் படத்தை வைத்து தற்போது பாஜகவினர் கிண்டலடித்துக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக பாஜக தொழில் பிரிவு மாநில துணைத் தலைவர் செல்வக்குமார் படத்தில் வட்டமிட்டு சில தவறுகளை சுட்டிக் காட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

வசூல்ராஜா MBBS மருத்துவமனையில் அடுத்தகட்ட நாடகம் நடந்து வருகிறது
1) ஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக face mask
2) கையில் வெரும் band-aid, டிரிப்ஸ் போடவில்லை
3) பின்னால் இருக்கும் மானிட்டர் வேலை செய்யவில்லை. 
#அழுகாச்சி_பாலாஜி

என்று கலாய்த்துள்ளார் செல்வக்குமார். இதேபோல நாராயணன் திருப்பதி நேற்று போட்ட டிவீட்டில், திரைக்கதை சரியில்லை என்று கூறி செந்தில் பாலாஜி காருக்குள் படுத்து அழுத காட்சியை கிண்டலடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

அதிலும் சில பாஜகவினர், அவ்வளவு நெஞ்சு வலியிலும் கூட செந்தில் பாலாஜி காலால் நன்றாக உதைக்கிறார் பாருங்கள்  என்ன ஆச்சரியம் என்று கேட்டு கிண்டலடித்திருந்தனர்.

இதுதவிர நிறைய மீம்ஸ்களும் கூட செந்தில் பாலாஜியை வைத்து வலம் வருகின்றன. சங்கமம் படத்தில் வரும் வடிவேலு பட காமெடிக் காட்சி படத்தை வைத்துக் கொண்டு, "நல்ல வேளை.. ஈடி அதிகாரிகள் மட்டும் ரெய்டுக்கு வராமல் போயிருந்தால்.. அண்ணனுக்கு இதயத்தில் இருந்த அடைப்பு தெரியாமலேயே போயிருக்கும்.. அவங்க வந்து அண்ணன் உயிரைக் காப்பாத்திட்டாங்க.. இல்லடா".. என்று கூறி கலகலக்க வைத்துள்ளனர்.

எப்படி போயிட்டிருக்கு பாருங்க நம்ம அரசியல்!!!!

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்