தெலங்கானா சட்டசபை திறப்புக்கு என்னை கூப்பிடலையே.. தமிழிசை ஆதங்கம்

May 25, 2023,12:46 PM IST
சென்னை:  தெலங்கானாவில் பிரமாண்டமாக சட்டசபை கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு எனக்கு அழைப்பு  கூட விடுக்கப்படவில்லை என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழா பெரும் சர்ச்சையாகியுள்ளது.

இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை வைத்துத்தான் புதிய நாடாளுமன்றத்தைத் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன.



குடியரசுத் தலைவர் அழைக்கப்படாத பட்சத்தில் விழாவைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 19 கட்சிகள் அறிவித்துள்ளன. இதுதொடர்பாக கூட்டறிக்கையும் விடுத்துள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஆளுநர் மாளிகையில் ஒரு பிரஸ் மீட் நடந்தது. அதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்தி அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு தமிழிசை செளந்தரராஜன் பதிலளிக்கையில், மிக சமீபத்தில் மிகப் பிரமாண்டமாக பெரிய (தெலங்கானா) சட்டசபை திறந்து வைக்கப்பட்டது. முதல்வர்  (கேசிஆர்) திறந்து வைத்தார். எல்லோரும் கேட்டார்கள். கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்று. இல்லை முதல்வர்தான் ஆட்சி செய்கிறார் என்று சொன்னார்கள். ஆரம்பித்து வைப்பதற்கு கூட இல்லை, அழைப்பு கூட விடுக்கப்படவில்லை. 

இப்போது அரசியல் சார்பு இல்லாதவர் ஜனாதிபதி, குடியரசுத் தலைவர் என்று சொல்கிறீர்கள். அதையே ஆளுநர்களுக்கு சொல்வதில்லை. ஆளுநர்கள் அரசியல் சார்பற்றவர்கள் என்று நாங்கள் சொன்னால் யாரும் ஒப்புக் கொள்வதில்லை. இப்போது பிரதமர் என்று வரும்போது குடியரசுத் தலைவர் அரசியல் சார்பற்றவர் என்று சொல்கிறீர்கள். இதிலேயே முரண்பாடு இருக்கிறது என்று கூறினார் தமிழிசை செளந்தரராஜன்.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்