கேரளாவில் வேகமாக பரவும் டைப் 2 டெங்கு... 4 நாட்களில் 309 பேர் பாதிப்பு; 5 பேர் பலி

Jul 06, 2023,12:32 PM IST
திருவனந்தபுரம் : கேரளாவில் தொடர்ந்து பெய்ந்து வரும் மழையால் டெங்கு வேகமாக பரவி வருகிறது. கடந்த 4 நாட்களில் 300 க்கும் அதிகமானவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மாதமும் காய்ச்சலால் 23 பேர் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இடையில் சொதப்பிய பருவ மழை கடந்த 3 நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கிட்டத்தட்ட கேரளாவின் அனைத்து மாவட்டங்களிலும் பெரு மழை பெய்து வருகிறது. குறிப்பாக வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டுகிறது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப்  பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில்தான் தற்போது அங்கு டெங்கு பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில,  
சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபத்தின் படி, இதுவரை டெங்குவால் 3409 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இப்போது வரை  10,038 பேர் டெங்கு பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. டெங்கு தவிர மழை தொடர்பான எலி காய்ச்சல், டைபாய்டு உள்ளிட்ட பல காய்ச்சல்கள் பல மாவட்டங்களில் பரவி வருகிறது.

கொல்லம், கோழிக்கோடு உள்ளிட்ட 138 இடங்கள் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ள இடங்களாக சமீபத்தில் கண்டறியப்பட்டன. தற்போது கேரளாவில் அதிகம் பரவி வருவது டைப் 2 டெங்கு காய்ச்சல் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்