சென்னை : பொதுவாக ஒரு படம் ரிலீசான பிறகு தான் அதற்கு எதிர்ப்பு வரும். ஆனால் நடிக்க உள்ள தலைவர் 170 படத்திற்கு பூஜை போட்டதுமே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இன்று திடீரென ட்விட்டரில் #VanniyarsBoycottRajinikanth என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கி உள்ளார் ரஜினி. டி.ஜே.ஞானவேல் இயக்கும் இந்த படத்திற்கு தலைவர் 170 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் இந்த படத்திற்கு பூஜை போட்டுள்ளனர். விரைவில் இந்த படத்தின் ஷூட்டிங் கேரளாவில் துவங்க உள்ளது. இதனால் குஷியான ரஜினி ரசிகர்கள் தலைவர் 170 படம் பற்றிய பல தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.
விஜய் நடித்த லியோ பட டிரைலர் பற்றிய செய்திகள் அதிகம் வந்த கொண்டிருப்பதால் தலைவர் 170 பற்றி பேச்சு கடந்த இரண்டு நாட்களாக சற்ற அடங்கி இருந்தது. இந்நிலையில் இன்று திடீரென ட்விட்டரில் #VanniyarsBoycottRajinikanth என்ற ஹேஷ்டாக் டிரெண்டானது. இதனால், ரஜினிக்கும் வன்னியர்களுக்கும் என்ன பிரச்சனை...அவர்கள் எதற்காக ரஜினியை புறக்கணிப்பதாக போர்க்கொடி உயர்த்த வேண்டும் என அனைவரும் குழப்பம் அடைந்தனர்.
விசாரித்த பார்த்தால், இது ரஜினிக்கான எதிர்ப்பு இல்லையாம். டைரக்டர் ஞானவேலுக்கான எதிர்ப்பாம். ஜெய்பீம் படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருந்ததால் அந்த படம் ரிலீசான சமயத்திலேயே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து அந்த படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டது, சூர்யாவிற்கு எதிர்ப்பு எழுந்தது எல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்து முடிந்த கதை. அப்போது துவங்கிய இந்த பிரச்சனை தான் தற்போது வரை தீராமல் உள்ளதாம்.
ஜெய்பீம் பட விவகாரத்தின் எதிரொலியாக ஞானவேல் இயக்கும் அனைத்து படங்களையும் புறக்கணிக்கவும், எதிர்க்கவும் வன்னியர் சங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி நடிப்பதால் ரஜினியையும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளார்களாம். அதனால் தான் இப்படி ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். தலைவர் 170 படம் பூஜை போட்டதும் எதிர்ப்பை சந்திக்க துவங்கி விட்டது. அடுத்து என்னென்ன பிரச்சனைகள் வர போகிறதோ...தலைவருக்கே வெளிச்சம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}