கத்ரினாவுடன் விவாகரத்து.. ஏடாகூட கேள்விக்கு விக்கி கொடுத்த சூப்பர் பதில்

May 17, 2023,11:19 AM IST
மும்பை : நடிகர் விக்கி கெளசல், சாரா அலி கான் இணைந்து நடித்துள்ள படம் Zara Hatke Zara Bachke. இந்த படத்தின் கதையே முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது திருமணம் செய்து கொள்வது தான். இந்த படம் ஜூன் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

டிரைலர் வெளியீட்டு விழாவில் விக்கி கெளசல், சாரா அலி கான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பத்திரிக்கையளர் ஒருவர் விக்கியிடம், கத்ரினா கைஃபை விட அழகான ஒரு நடிகையை பார்த்தால் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி யோசிப்பீர்களா? என விவகாரமான கேள்வி ஒன்றை கேட்டார்.



இந்த கேள்வியை கேட்டதும் விக்கியின் அருகில் நின்ற சாரா அலி கான், அதிர்ச்சியில் வாயை திறந்த படி நின்றார். அவரால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. இந்த கேள்வியை கேட்டு முதலில் ஷாக்கான விக்கி, பிறகு சமாளித்துக் கொண்டு கலகலப்பாக பதிலளித்தார்.

விக்கி பேசுகையில், " என்ன சார் நீங்க...ரொம்ப சாதாரணமா இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க? நான் ஈவினிங் வீட்டுக்கு வேற போகணும். இப்படி ஒரு கஷ்டமான கேள்வியை கேட்டுட்டீங்க��ே. இதுல நான் இன்னும் குழந்தை தான். அப்படி இருக்கையில் இப்படிப்பட்ட ஒரு ஆபத்தான கேள்விக்கு என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்? என்றார்.

தொடர்ந்து பேசிய விக்கி கெளசல், இந்த பிறவியில் மட்டுமல்ல என்னுடைய அடுத்த பிறவியிலும் கூட கத்ரினாவை விட்டுட்டு நான் போக மாட்டேன் என்றார். இந்த பதிலை கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

இதை பார்த்த பலரும், "ஒரே கத்ரினா தான். அவரை போல் யாரும் வர முடியாது என்பதை விக்கி சூப்பரா சொல்லிட்டாரு", அந்த பத்திரிக்கையாளர் கேட்டதும் விக்கியின் முகத்தில் கோபம் பொங்கி வந்ததை பார்க்க முடிகிறது. ஆனாலும் அவர் அதை அடக்கிக் கொண்டு, சமாளித்து பதிலளித்துள்ளார்", "முட்டாள்தனமான அநாகரீகமான கேள்வி. இதை மிக பக்குவமாக ஜாலியாக கையாண்டுள்ளார் விக்கி" என சோஷியல் மீடியா ரசிகர்கள் பலரும் பல விதங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.  

பல ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்த விக்கி கெளசலுக்கும், கத்ரினாவுக்கும் 2021ம் ஆண்டு டிசம்பர் 09 ம் தேதி திருமணம் நடைபெற்றது.  திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த திருமணம் முடிந்ததும், தாங்கள் நெருக்கமாக இருக்கும் ஹனிமூன் போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு, பரபரப்பாக்கினார் கத்ரினா.

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்