அஜித்தின் ஏகே 62 படத்திலிருந்து விலகல்...கன்ஃபர்ம் செய்த விக்னேஷ் சிவன்

Feb 04, 2023,11:01 AM IST
துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த ஏகே 62 படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்க்க துவங்கினர். ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் 2022 ம் ஆண்டு மார்ச் மாதமே லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. 



இதனால் ஏகே 62 படம் பற்றிய அடுத்த அப்டேட் எப்போது வரும், எப்போது ஷூட்டிங் துவக்குவார்கள் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஏகே 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித்திற்கு திருப்தி அளிக்காததால், அவருடனான படத்தை ஒத்திவைத்திருப்பதாக கடந்த சில நாட்களாக சோஷியல் மீடியாவில் தகவல் ஒன்று தீயாய் பரவி வருகிறது. 

ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க போவதாகவும், இதற்காக ஏற்கனவே அஜித்தை சந்தித்து அவர் ஓகே வாங்கி விட்டதாகவும் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இது வழக்கமான வதந்தியாக இருக்கும் என்ற கருத்தும் ரசிகர்களிடம் நிலவி வந்தது. இந்நிலையில் இந்த தகவல் உண்மை தான் என உறுதிப்படுத்தும் வகையில் தனது ட்விட்டர் பயோ பக்கத்தில் இருந்து #AK62 என்ற ஹேஷ்டேக்கை விக்னேஷ் சிவன் தற்போது நீக்கி உள்ளார். இதனால் ஏகே 62 படத்தில் இருந்து விலகியதை அவரே உறுதி செய்துள்ளார்.

லேட்டஸ்ட் தகவலின் படி, ஏகே 63 படத்தை தான் விக்னேஷ் சிவன் இயக்க போகிறார். ஏகே 62 படத்தில் அவர் இல்லை என்பதை தயாரிப்பாளரிடம் தெரிவிப்பதற்காக அஜித்தும், விக்னேஷ் சிவனும் விரைவில் லண்டன் செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறார். ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், அரவிந்த் சாமி ஆகியோர் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஏகே 62 படத்திற்கு அனிருத்திற்கு பதில் வேறு ஒரு இளம் இசையமைப்பாளர் மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், அனிருத் தான் ஏகே 62 படத்திற்கு இசையமைக்க போவதாக சொல்லப்படுகிறது.

ஏகே 62 படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி மாத மத்தியில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியது மற்றும் விக்னேஷ் சிவனுக்கு பதில் மகிழ் திருமேனி தான் ஏகே 62 படத்தை இயக்க போகிறார் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் விரைவில் வெளியிடும் என சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்