தாறுமாறாக டிரெண்டாகும் லியோ ஃபர்ஸ்ட்லுக்... இப்படி ட்ரீட்டை எதிர்பார்க்கலியே லோகி !

Jun 22, 2023,09:36 AM IST
சென்னை : விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. இதை நடிகர் விஜய்யும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜூன், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. 



பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும், முக்கிய அப்டேட்களையும் படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட, லியோ படத்திற்காக விஜய் பாடிய நான் ரெடி தான் பாடலின் ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் கொண்டாடி வருவதால் அது ஏற்கனவே டிரெண்டாகி உள்ளது.

இது வெறும் பாடலா அல்லது விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கான இன்ட்ரோவா என தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த பாடல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் லோகேஷ் கனகராஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், விஜய் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22 ம் தேதியன்று நள்ளிரவு 12 மணிக்கு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும். ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள் இரண்டும் ஒரே நாளில் வெளியிடப்படுவதால் இது விஜய் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமையும் என குறிப்பிட்டிருந்தார். 

லோகேஷ் கனகராஜ் சொன்னது போலவே நள்ளிரவு 12 மணிக்கு லியோ ஃபஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. ஆக்ரோஷமாக கையில் ரத்தம் தெறிக்கும் பெரிய சுத்தியுடன் இருக்கும் விஜய், அவருக்கு பக்கத்தில் கோபத்துடன் இருக்கும் வேட்டை நாய், பேக்கிரவுண்டில் அழகான மலைப் பிரதேச தோற்றம் என லியோ ஃபர்ஸ்ட் லுக் பட்டையை கிளப்புகிறது. இந்த போஸ்டரை நடிகர் விஜய்யும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

லியோ போஸ்டர் வைரலாகி வருவதால் ட்விட்டரில் #Leofirstlook என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி உள்ளது. அதோடு விஜய்க்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்