என்ன வெங்கட் பிரபு இப்படி பண்ணிட்டாரே...ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்

Jul 31, 2023,04:24 PM IST

சென்னை : ஒரே ஒரு ட்வீட்டால் சோஷியல் மீடியாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் ஆர்வமாக எதிர்பார்க்க வைத்து விட்டு, கடைசியில் சாதாரணமாக ஒரு விஷயத்தை சொல்லி டைரக்டர் வெங்கட் பிரபு ஏமாற்றி விட்டாரே என விஜய் ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.


நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். அக்டோபர் 19 ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வரும் இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தாலும், விஜய் அடுத்து நடிக்க உள்ள தளபதி 68 படம் பற்றிய அறிவிப்பிற்காகவும் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.




விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை வெங்கிட் பிரபு இயக்குகிறார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். ஏஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். லியோ படம் ரிலீசாக உள்ளதால் அடுத்து தளபதி 68 அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


இந்த சமயத்தில் டைரக்டர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், Venkat Prabhu gift என்ற வாசகம் நிறைய டிவி.,களில் ஒளிபரப்பாக அதை வெங்கட் பிரபு திரும்பி உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டு, நாளை காலை 11 மணி வரை காத்திருங்கள் என இரண்டு நாட்களுக்கு முன் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். இதனால் தளபதி 68 அப்டேட் தான் வெளியிட போகிறார் என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.


ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் தளபதி 68 பட அப்டேட்டை வெங்கட் பிரபு வெளியிடவில்லை. மாறாக தான் தற்போது தயாரித்து வரும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் பற்றிய அப்டேட்டை தான் வெளியிட்டிருந்தார். இதனால் பலரும், அப்போ தளபதி 68 அப்டேட் கிடையாதா? என ஏக்கமாக கேட்டிருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள வெங்கட் பிரபு. தளபதி 68 அறிவிப்பு சும்மா தெறிக்கும். காத்திருங்கள் என பதிலளித்துள்ளார்.


வெங்கட் பிரபு தற்போது தளபதி 68 படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் பிஸியாக இருந்து வருகிறார். அதோடு தளபதி 68 படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய தேர்வும் மும்முரமாக நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்