"காசு வாங்கிட்டு ஓட்டுப் போடாதீங்க".. விஜய் பேசிய அரசியல்!

Jun 17, 2023,12:51 PM IST
சென்னை: காசு வாங்கிட்டு ஓட்டுப் போடாதீங்க என்று நடிகர் விஜய் அறைகூவல் விடுத்துள்ளது இளைஞர்கள் மத்தியில் வேகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது என்பது காலம் காலமாக தமிழ்நாட்டிலும், ஆந்திராவிலும் நடந்து வருவதுதான். ஒரு நடிகர் திரையுலகில் உச்சத்தை எட்டி விட்டால், அவர் அரசியல் பக்கம் தானாக வருவார் அல்லது வர வைத்து விடுவார்கள்.



எம்ஜிஆர், என்டிஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் என பலரையும் உதாரணமாக காட்டலாம். ரஜினிகாந்த்தை அரசியலுக்கு இழுக்க என்னென்னவோ செய்து பார்த்தார்கள்.. அவரே கூட ஒரு கட்டத்தில் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவிக்கவும் செய்தார்.. ஆனால் குறுக்கே பாய்ந்த கொரோனாவால் அந்த அறிவிப்பு அல்பாயுசு ஆனது.

இந்த நிலையில் நடிகர் விஜய் எப்போது அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக உள்ளது. அவரிடமே கூட நீங்க அரசியலுக்கு வருவீங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. வருவதாக இருந்தால் நிச்சயம் சொல்லி விட்டு வருவேன் என்று அவரும் கூறியுள்ளார்.

இந்தப் பின்னணியில் இன்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பத்து மற்றும் பனிரெண்டாவது வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு பரிசளித்துக் கவரவிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு விஜய் பேசும்போது அரசியலும் பேசினார். வழக்கமாக குட்டிக் கதை சொல்வது வழக்கம். ஆனால் இந்த முறை அது மிஸ்ஸிங். மாறாக சில பல அறிவுரைகளை விஜய் வழங்கினார்.

விஜய் பேசிய அரசியல் பேச்சின் துளிகள்...

- ஓட்டுக்கு காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பது நல்லதல்ல. அது நமது விரலை வைத்தே நமது கண்ணைக் குத்துவது போல.

- ஓட்டுக்கு காசு தர ரூ. 15 கோடியை ஒரு வேட்பாளர் செலவழிக்கிறார் என்றால் அவர் எவ்வளவு சம்பாதித்திருப்பார் என்று யோசிச்சுப் பாருங்க.

- உங்க அம்மா, அப்பா கிட்ட காசு வாங்கிட்டு ஓட்டுப் போடாதீங்கன்னு சொல்லுங்க. 

- வாக்காளர்களுக்கு காசு தரக் கூடாது, அதை வாக்காளர்கள் வாங்கக் கூடாது என்பதையும் கல்வி திட்டத்தில் வைத்து போதிக்க வேண்டும்.

- வாட்ஸ் ஆப் மூலம் போலி தகவல்களைப் பரப்புகிறார்கள். அதை ஆராய்ந்து பார்த்து எடுக்க வேண்டும்.

- உங்களிடம் காசு, சொத்து இருந்தால் பறித்து விடுவார்கள். படிப்பை பறிக்க முடியாது.

- நல்ல தலைவர்களுக்கு மாணவ, மாணவியர் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

- முதல் தலைமுறை வாக்காளர்கள் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்க வேண்டும்.

- அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்றோரின் வாழ்க்கையைப் படிக்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்