அடுத்தடுத்து அதிரடி.. தொடர்ந்து 2வது சதம்...தெறிக்க விட்ட விராத் கோலி!

May 22, 2023,10:25 AM IST

பெங்களூரு : ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து தனது 2வது சதத்தை பதிவு செய்துள்ளார் விராத் கோலி. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராத் கோலி 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தி உள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிய போட்டி, பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாகவே துவங்கியது. முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. 



இதில் 60 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார் விராத் கோலி. இதில் 13 பவுண்டரிகள், ஒரு சிக்சர் அடங்கும். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இவர் அடிக்கும் ஏழாவது சதம் இதுவாகும். சமீபத்தில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது 6வது சதத்தை அடித்து கிரிஸ் கெயிலின் சாதனையை சமன் செய்த விராத் கோலி, தற்போது கிரிஸ் கெயிலின் சாதனையை முறியடித்துள்ளார். 

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து அதிக சதங்களை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோஸ் பட்லர், ஷிகர் தவானை தொடர்ந்து 3வது இடத்தில் உள்ளார் விராத் கோலி. ஐபிஎல் 2023 தொடரில் மட்டும் விராத் கோலி 630 ரன்கள் எடுத்துள்ளார். ஒரே ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற பெருமையையும் விராத் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் 2016 ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளில் 973 ரன்கள் எடுத்து விராத் கோலி தான் முதலிடத்தில் உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்