ரஜினியின் "தலைவர் 170" படத்தின் கதை இது தானா.. இவர்தான் வில்லனா??

May 22, 2023,12:17 PM IST

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படத்தின் கதை குறித்து இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர்.

ரஜினி தற்போது அடுத்த படங்களுக்கு தயாராகி பிஸியாக நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க துவங்கி விட்டார். விஷ்ணு விஷால், விக்ராந்த் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் மெய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் ரோலில் நடிக்கிறார் ரஜினி.



கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவும் நடிக்கிறார். ரஜினி - கபில்தேவ் சந்தித்த பிடிஎஸ் போட்டோக்களை ஐஸ்வர்யா சமீபத்தில் வெளியிட்டார். இது செம வைரலானது. லால் சலாம் படத்தில் ரஜினி தனது பகுதிகளை இன்னும் இரண்டு வாரங்களில் நடித்து முடிக்க போக���றாராம்.


அதைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிப்பில், டி.ஜே.ஞானவேல் இயக்கும் பிரம்மாண்ட படமான தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் பங்கேற்ற போகிறார் ரஜினி. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க நடிகர் விக்ரமிடம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு விக்ரம் நோ சொல்லி விட்டதாகவும், இருந்தாலும் தொடர்ந்து அவரை நடிக்க வைக்கும் முயற்சி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் ரஜினியின் தலைவர் 170 படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய தகவலின் படி, தலைவர் 170 படத்தில் ரிட்டயர்டு போலீஸ் அதிகாரி ரோலில் தான் ரஜினி நடிக்க போகிறாராம். போலி என்கவுன்ட்டர் பற்றிய கதையாம் இது. இந்த போலி என்கவுன்ட்டர் முறையை எதிர்த்து ஹீரோ போராடுவது தான் கதையாம். 

டி.ஜே.ஞானவேல் ஏற்கனவே இதே போன்று நிஜ வாழ்க்கையில் நடந்த கதையை தான் ஜெய்பீம் படமாக இயக்கினார். இவர் தனது படங்களில் முக்கியமான சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து, அதை படமாக்கக் கூடியவர். ஆனால் இது தான் படத்தின் கதை என்பது உண்மை தானா என்பதை ஜூலையில் தலைவர் 170 பட ஷூட்டிங் துவங்கும் வரை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்