விஜய் 68..  செம உற்சாகத்தில் யுவன் ஷங்கர் ராஜா.. இருக்காதா பின்னே!

May 22, 2023,04:30 PM IST

சென்னை : விஜய்யின் தளபதி 68 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அசத்தலான வீடியோவுடன் வெளியிட்டு, வதந்தியாக பரவி வந்த தகவல் உண்மை தான் என உறுதி செய்துள்ளது ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பு நிறுவனம்.

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 19 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார்.



இந்நிலையில் கடந்த சில நாட்களாக விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 படத்தை வெங்கட் பிரபு இயக்க போவதாகவும், யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க போவதாக சோஷியல் மீடியாவில் தகவல் ஒன்று தீயாய் பரவி வந்தது. இதனையடுத்து #Thalapathy68 என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் டிரெண்டானது. 

இந்நிலையில் இந்த தகவல் உண்மை தான் என்பது வீடியோ வெளியிட்டு உறுதி செய்ததுடன், தளபதி 68 படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், பேனா பிடித்த கை ஒன்று பேப்பரில் கிராஸ்வேர்டு போட்டியில் ஏஜிஎஸ், யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, தளபதி விஜய் ஆகிய பெயர்களை  வட்டமிடுகிறது. பிறகு பின்னணியில் அனல் பறக்க தளபதி விஜய்யின், தளபதி 68 என்ற அறிவிப்பு வருவதாக அமைக்கப்பட்டுள்ளது. 

அதோடு ட்விட்டரில் போஸ்ட் போட்டுள்ள அர்ச்சனா கல்பாத்தி, எங்களின் 25 வது படத்தில் தளபதி விஜய்யுடன் மீண்டும் கைகோர்ப்பதை பெருமையாக நினைக்கிறோம்.  Thalapathy68/Ags25 இணையும் படத்தை திறமையான டைரக்டர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார். யுவன்சங்கர் ராஜ் இசையமைக்கிறார். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் எங்களுக்கு தேவை. இந்த படம் சூப்பர் ஸ்பெஷல் படமாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.

கிட்டதட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதால் விஜய் ரசிகர்கள் மிக ஆவலாக உள்ளனர். லியோ படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தளபதி 68 ஷூட்டிங் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இது பற்றிய அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்