சென்னை: அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கத்திரி வெயில் காலமான தற்போது உருவான காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள், வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் வெப்பநிலை இயல்பை விட சற்று குறைந்து காணப்படுகிறது.
இதற்கிடையே அரபிக் கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இது தெற்கு கொங்கன் கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதிக்கு அப்பால் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுவடைய கூடும் எனவும், இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைய கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
அதேபோல் வங்க கடல் பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வரும் மே 27ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக கூடும் எனவும், இது அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைய கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}