கோவை: கோவை பல்லடம் வழியே சென்ற பேருந்து ஒன்றில் பயணி ஒருவரை இறங்க சொன்ன நடத்துனரை, கீழே இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். உடனே பதறிய நடத்துனர் வேகமாக ஓடிவந்து சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன்.. எனக் கூறிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நேற்று தான் திருப்பூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில், பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் பிளஸ் டூ மாணவி ஒருவர் பேருந்தில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒன் சி என்ற அரசு பேருந்து ஸ்டாப்பில் நிற்காமல் வேகமாக சென்றது.
உடனே பிளஸ் டூ மாணவி தேர்வு எழுத எழுதாமல் போய்விடுமோ என்ற பயத்தில் வேகமாக பேருந்தை துரத்தி ஓடியுள்ளார். மாணவி ஓடியதை பார்த்த சிலர் அதனை வீடியோவாக பதிவு செய்தனர். இது சோசியல் மீடியாவில் வைரனாலது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் ஓட்டுனர் முனிராஜிடம் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவரை சஸ்பெண்ட் செய்தார்.

இந்த நிலையில், அதேபோன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. கோவையில் இருந்து பல்லடம் வழியாக போடி செல்லும் பேருந்து கே. கள்ளிப்பாளையம் நிற்காது என நடத்துனர் கூறி ஒரு பயணியை கீழே இறங்கச் சொல்லி இருக்கிறார். நடத்துனரின் இந்த செயலை கீழே இருந்த ஒருவர் வீடியோவாக பதிவேற்றம் செய்தார்.
இதனைப் பார்த்த நடத்துனர் உடனே பதறிப் போய் வேகமாக ஓடி வந்து சாரி சார்.. தெரியாம சொல்லிட்டேன்.. எனக்கூறி அந்தப் பயணியை மீண்டும் பேருந்தில் ஏற சொல்லி வற்புறுத்தி உள்ளார்.. நடத்துனரின் இந்த செயல் சோசியல் மீடியாவில் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தங்கம் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று உயர்வு.... சவரனுக்கு ரூ.240 உயர்வு!
Crab.. வீட்டுக்கு நண்டு வந்தா நல்லதா கெட்டதா?.. வாங்க தெரிஞ்சுக்கலாம்!
சொர்க்கமே என்றாலும் அது எங்கூரைப் போல வருமா.. வாக்கப்பட்ட மண்!
சட்டசபை அலங்கார முகப்புடன் அ.தி.மு.க பொதுக்குழு.. 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன!
Quick Tips: சப்பாத்தியை பல்லு இல்லாத தாத்தாவும் சாப்பிடுவாரு இப்படி தந்தா!
திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 10, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
{{comments.comment}}