சென்னை: அம்பேத்கர் என்ன கடவுளா? என்று கருத்து தெரிவித்த அமித்ஷாவை கண்டித்து விசிக சார்பில் டிச., 28ம் தேதி 1000 முறை அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் போராட்டம் நடைபெறும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து திருச்சியில் விசிக தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எல்லா பத்திரிக்கையாளர்களையும் அழைத்து நான் அந்த பொருளில் சொல்ல வில்லை. காங்கிரஸ் தான் திருத்தி பேசுகிறது என்று அவர் விளக்கம் அளித்து இருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் காங்கிரசை விமர்சித்தார் என்றாலும் கூட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை கடவுளோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குள்ள ஒரு வெறுப்பு அல்லது அம்பேத்கர் மீதான குறைவான மதிப்பீட்டை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தியா முழுவதும் அதற்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிற சூழலில் பிரதமர் மோடி உட்பட அமைச்சர்கள் அமித்ஷா பேசியது தவறு இல்லை என்று நியாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். எக்ஸ் தளத்தில் அவற்றை நீக்க வேண்டும் என்று அரசின் சார்பிலேயே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிறுவனம் அதற்கு மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி தோற்கடித்தது என்று திரும்ப திரும்ப பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சார்ந்தவர்களும் சொல்லுகிறார்கள். ஆனால், உண்மையில் அம்பேத்கர் அவர்களே பேசிய குறிப்புக்கள் இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் தான் உண்மையில் திரித்து பொய்யை பரப்புகிறார்கள். தேர்தல் நேரத்தில் யாராக இருந்தாலும் அவர்களை நாம் தோற்கடிக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அவர்கள் வெற்றி பெறட்டும் என்று யாரும் நினைக்க மாட்டார்கள்.
ஆனால், இவர்கள் கருத்தியல் ரீதியாக முரண்படுகின்றனர். அம்பேத்கருடைய சிந்தனைகளை மறுத்து அவரை இந்துத்துவா அம்பேத்கர் என்று அடையாளப்படுத்தி அவரை விழுங்கி செரிக்க பார்க்கின்றனர். இதை ஏற்க முடியாது என்பது தான் இன்றைக்கு அம்பேத்கருடைய இயக்கங்களை சார்ந்த தலைவர்களும் பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். வருகிற 28ம் தேதி இந்தியா முழுவதிலும் இதனைக்கண்டித்து, நுற்றுக்கணக்கான அம்பேத்கர் இயக்கங்கள் ஒரே நேரத்தில் மாநில வாரியாக ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம் . விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் 28ஆம் தேதி தலைநகர் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். ஆயிரம் முறை அம்பேத்கர் பெயரை உச்சரித்து போராட்டமாக அந்தப் போராட்டம் அமையும். அம்பேத்கர் விளிம்பு நிலை மக்களுக்கான மீட்பர். அவர் என்ன கடவுளா என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஆத்திரத்தை வெளிப்படுத்திய அமித் ஷா அவர்களின் போக்கு கண்டனத்திற்குரியது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}