கஸ்தூரி கேட்ட "நெகட்டிவ்" கேள்வி.. ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்த "பாசிட்டிவ்" பதிலடி!

Apr 28, 2023,09:22 AM IST
சென்னை: இசைப் புயல் ஏ. ஆர்.ரஹ்மானின் மனைவிக்கு தமிழ் தெரியாதா என்று நடிகை கஸ்தூரி கேட்ட கேள்விக்கு சிறப்பான பதிலடி கொடுத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்

ஒருவரை மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும், சாதியாலும் டீஸ் செய்வது சட்டப்படி குற்றமாகும். ஆனால் அதைத்தான் பலர் முழு நேரமாக செய்து வருகின்றனர். இதை ஒரு பாலிசியாகவே வைத்துக் கொண்டிருப்போரும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் நெகட்டிவிட்டி நிறைந்த உலகில்தான் இன்று நாம் வாழும் சூழல் உள்ளது.



சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் மேடை ஏறிய நிகழ்ச்சியின் வீடியோ வெளியானது. அதில் அவரது மனைவி இந்தியில் பேச முயன்றபோது அருகில் இருந்த ரஹ்மான், இந்தியில் பேசக் கூடாது. தமிழில் பேசுங்க என்று கூறவே அவர் ஆங்கிலத்தில் பேசினார். தனக்கு தமிழ் சரியாக வராது என்றும்  தெரிவித்தார்.

அது அவரது தவறில்லை. அவரது தாய்மொழி தமிழ் கிடையாது. எனவே தமிழ் வராது என்பதில் ஆச்சரியம் இல்லை. இது இயல்பானதுதான். எல்லோருக்குமே அவரவர் தாய்மொழிதான் சரளமாக வரும். பிற மொழிகள் அர்களைப் பொறுத்தவரை சாய்ஸ்தான்.. அதைத் தவறு என்று கூறவே முடியாது. அந்த அடிப்படையில்தான் ரஹ்மான் மனைவியும் தனக்கு தமிழ் வராது என்பதை  நாகரீகமாக கூறினார்.

ஆனால் நடிகை கஸ்தூரி பாய்ந்தோடி வந்து,  என்னது ஏ.ஆர்.ரஹ்மான் மனைவிக்கு தமிழ் தெரியாதா. அவங்க தாய் மொழி என்ன..  வீட்டுல குடும்பத்துல என்ன மொழி பேசுவாங்க என்று கேட்டதும் ரஹ்மான் ரசிகர்கள் சரமாரியாக விமர்சிக்கத் தொடங்கினர். அவங்க தாய் மொழி என்னவா இருந்தா உங்களுக்கு என்ன.. வீட்டுல என்ன பேசினா உங்களுக்கென்ன என்று சரமாரியாக வெளுத்து விட்டனர்.

ஆனால் ஹைலைட்என்னவென்றால் ரஹ்மானே வந்து தற்போது பதிலளித்துள்ளார் என்பதுதான். காதலுக்கு மரியாதை.. இதுதான் ரஹ்மான் கொடுத்த சூப்பர் பதில்.. ரஹ்மானின் இந்த சிறப்பான பதிலடிக்கு அவரது ரசிகர்கள் வரிசை கட்டி வந்து பாராட்டிக் கொண்டுள்ளனர்.. கெத்துண்ணே நீ...இதனால்தான் ஏஆர்.ரஹ்மானை நாங்கள் நேசிக்கிறோம் என்று பாராட்டித் தள்ளிக் கொண்டுள்ளனர்.

ரஹ்மானின் இந்தப் பதிலை கஸ்தூரியே எதிர்பார்க்கவில்லை போலும்.. நாலு தம்ப்ஸ் அப் ஸ்மைலி போட்டு விட்டு கப்சிப்பென்று போயுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

அஜா ஏகாதசி.. மகா விஷ்ணுவையும்.. மகாலட்சுமி தாயாரையும் நினைத்து விரதம் இருப்போம்!

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

news

Motivational Monday: மாறுபடும் மதிப்புகளும் மதிப்பீடுகளும்.. சிறுகதை!

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அதிகம் பார்க்கும் செய்திகள்