சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் D56 படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைக்க உள்ளதாக அப்பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது புதுக்கோட்டையில் இருந்து சரவணன், வேலையில்லா பட்டதாரி, ஆடுகளம் மாரி, திருச்சிற்றம்பலம் என பல்வேறு படங்களில் நடித்து தன்னை புதுப்பித்துக் கொண்டு வருகிறார். தற்போது நடிப்பதை தாண்டி தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், என பன்முகத் திறமைகள் பெற்று விளங்குகிறார். நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராயன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாக தயாராகி வருகிறது. இதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் தனது 56 ஆவது படத்தில் நடித்து வருகிறார். பெயரிடாத இந்த படத்திற்கு d56 என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக, 2021 ஆம் ஆண்டில் தனுஷ் மற்றும் இயக்குனர் மாரி செல்வராஜ் கூட்டணியில் கர்ணன் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து, அனைத்து தரப்பினரிடையே பாராட்டைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் d56 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படம் குறித்த அப்டேட்டை அவ்வபோது வெளியிட்டு வருகிறது படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

அதன்படி, பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் இப்படம் சரித்திர கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறதாம். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இந்த நிலையில் தனுஷ்- மாரி செல்வராஜ் கூட்டணியில் கர்ணனின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது d56 படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் இறுதியாக வாழை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்று அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் உடன் கூட்டணி அமைத்துள்ளார். தனுஷின் 56வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையே கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் பைசன் படத்தில் துருவ் விக்ரமை வைத்து இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}