- அ.சுபாலட்சுமி
என் தனித்திறமையை வெளிகொண்டுவர முதல் பள்ளியில் இருந்து வெளியே வந்தேன். பிறகு மீண்டும் ஓர் வருடம் சில மன கஷ்டங்கள். அதில் இருந்து வெளி வர ஓர் வீட்டில் குழந்தைகளுக்கு ஓவியம் மற்றும் கையெழுத்து வகுப்பு எடுத்தேன்.
அப்போது மற்றொரு பள்ளியில் வேலை கிடைத்தது. இந்த முறை நான் மிகுந்த தன்னம்பிக்கையுடன் நேர்காணலில் பங்கேற்று யார் துணையும் இன்றி ஆசிரியராய் என் பணியை தொடங்கினேன். மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். ஒவ்வொரு வருடமும் புது புது அனுபவங்கள்.

முதலாம் ஆண்டில் வகுப்பாசிரியராய் இருந்த போது ஒவ்வொரு நாளும் புது புது பஞ்சாயத்தை சமாளிப்பதே என் வேலையாக இருந்தது. மாணவர்கள் நல்லா படிப்பார்கள் ஆனால் படு சேட்டை. அவர்களால் பல முறை நான் பள்ளி முதல்வரை சந்தித்துள்ளேன்.
இரண்டாம் ஆண்டில் வந்த குழந்தைகள் தங்கமானவர்கள். என்னை ஒரு போதும் கோபப்படுத்த மாட்டார்கள். ஒருவன் என்னை கோபப்படுத்த முயன்றால் அந்த வகுப்பு தலைவன் என்னை கத்தவிடாமல் அவனே சமாளித்து விடுவான். அந்த அளவு என் மேல் அன்பு வைத்திருந்தனர்.

மூண்றாம் ஆண்டில் உண்மையில் நான் மிகவும் மனவருத்தம் அடைந்தேன். காரணம் பெற்றோர்கள். இங்கே நான் குழந்தைகளை குறை சொல்லமாட்டேன். ஏனென்றால் அவர்களை உயர்த்துவது ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் கடமை. எனக்கு பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அது மட்டும் இன்றி இன்றைய பெற்றோர்கள் மற்றும் சமூகம் ஆசிரியர் மாணவர்களைத் திட்டினாலே ஓர் பிரச்சனையாக கருதுகிறார்கள்.
'என்றைக்கு ஆசிரியர் தன் கையில் உள்ள குச்சியை கீழே வைத்தாரோ அன்றே போலீஸ் தன் லத்தியைக் கையில் எடுத்துவிட்டனர்' என்பதை நான் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். ஆனால் ஆசிரியர் என்ற பதவி நான் திருமணம் செய்யாமலே பல குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் வாய்ப்பை தந்தது.
இந்த பள்ளியிலும் பல அனுபவங்களை கற்றுக்கொண்டேன். இந்தக் காலத்து பெற்றோர்களை நினைத்தால் நல்ல விஷயங்களை சொல்லித்தரும் ஆசிரியர்களை, தன் குழந்தையைக் கண்டிக்கத் தடை விதிக்காமல் அவர்களின் அக்கறையைப் புரிந்து கொண்டால் வெறும் களிமண்ணாய் ஆசிரியரிடம் தந்த தங்கள் குழந்தையை உலகம் போற்றும் அழகிய சிற்பமாய் வடிவமைத்து தருவதை நீங்கள் காண்பீர்கள். இது மாறாத உண்மை.
(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)
Dr N Badhri's Drama Review: தொடுவான மனிதர்கள்
சிவெபருமானின் சொந்த ஊர் இதுதாங்க.. சென்னை டு ராமேஸ்வரம் ஒரு ஆன்மீகப் பயணம் (பகுதி 4)
மீண்டு வர கை கொடுத்த ஓவியம்.. என் ஆசிரியர் பணி (மினி தொடர் 2)
காத்திருந்து பார்த்திருந்து கருவிழியும் பூத்திருந்து!
மழை
சமையல் With ஸ்வர்ணா- தீபாவளி ஸ்பெஷல் - பாரம்பரிய பலகாரம் சாஃப்ட்டான அதிரசம்!
தென்தமிழ் தலையங்கம்: மந்திரக் கரண்டியும் மல்டி-டாஸ்கிங்கும் - ஹேப்பி இல்லத்தரசிகள் டே!
தீபாவளி பண்டிகை 2026: தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்கள்; நாளை புக்கிங் தொடக்கம்
பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கிய விவரகாம் : அன்பில் மகேஷ் மனைவி ஜனனியிடம் விசாரணை நடத்த திட்டம்!
{{comments.comment}}