- அ.தாமஸ்
வாழ்வை வளர்ப்பதும் போதை!
வாழ்வைச் சிதைப்பதும் போதை!
அன்பின் போதை உறவைக் கொடுக்கும்!
அறிவின் போதை அறிவின் தெளிவைக் கொடுக்கும்!
கற்றலின் போதை தேடலைக் கொடுக்கும்!
தேடலின் போதையே நல் தெளிவைக் கொடுக்கும்!
கருணையின் போதை நல் கனிவை கொடுக்கும்!
பாதை காட்டும் போதையை ஏற்று! பாதை மாற்றும் போதையை நீக்கு!
கண்டுபிடிப்புகளைத் தந்ததும் போதை!
கருணையை எங்கும் விதைத்ததும் போதை!

உயரிய நட்பைக் கொடுத்ததும் போதை!
உறவாய் பலரையும் இணைத்ததும் போதை!
சிந்தனையை நம்மில் சேர்த்ததும் போதை!
சிகரம் தொட நம்மை வைத்ததும் போதை!
இத்தனை நல்போதைகள் இயல்பாய்க் கிடைத்தும், கிடைப்பதை விடுத்தோம்;
கிடைக்காததைத் தேடியே நம்மில் இணைத்தோம்!
நல்லவை நம்மில் இணைந்தே இருந்தால்,
அல்லவை என்றும் இணையவே நினையா!
உயரிய போதையை உன்னில் சேர்த்தால்,
உயிர் மாய்க்கும் போதையோ என்றுமே உன்னைச் சேரா!
தூய நல்போதையை நம்மிலே சேர்த்தே தீய போதையை தூர எறிவோம்!
இந்நிலையை எந்நாளும் நம்மில் ஏற்போம்!
தீய போதை இல்லா புத்துலகை நாமே படைப்போம்!
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)
பழைய கதைகள் நல்லதா? கெட்டதா?
போதை இல்லாப் புத்துலகு
வாத்தும் நாங்களும்!
Short Story: நெஞ்சமெல்லாம் நீயே!
எளிமையின் முரண்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
{{comments.comment}}