சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

Sep 09, 2026,03:32 PM IST

- அ.தாமஸ்


கல் உடைத்து சிலை வடிக்கும் சிற்பியின் கை உளிகள் கூட சிந்தித்தே சிதைக்கிறது. வடிப்பது சிற்பம் தான் என்றாலும், வலிக்கும் என்று சிறுகச் சிறுகவே சிதைக்கிறது.  அச்சிதைவிலும்  வழிபடும் சிலையையே வடிக்கிறது.


சில மானிடப் பதர்கள் மட்டும்தான், சக மனிதனுக்கும் வலிக்கும் என்பதையே மறந்துவிட்டு, மீண்டும் மீண்டும் வலி கொடுக்கவே நினைக்கின்றனர். வலியில் துடிப்பதையும் கூட  முக மலர்ச்சியோடு ரசிக்கின்றனர்.


உளியிடம் இருக்கும் கருணை கூட சில மனிதரிடம் மரத்துப் போய்விட்டது. இந்நிலை அறிந்தால், மரம் கூட இத்தகு மானுடர்களை நினைத்து வெறுத்துப் போய்விடும்.




தம் உழைப்பை உயர்த்திப் பிடிக்கும் சிலர், மற்றவர்களின் உழைப்பையும் உணர்வையும் நினைக்க மறுப்பதால்தான், தமக்கு வலிப்பது போல் பிறருக்கும் வலிக்கும் என்பதையே மறந்து போகின்றனர். 


உணர்வும், உழைப்பும், வலியும், ரணமும் உயிருள்ள யாவருக்கும் உரியதே என்பதை உணர்வோம்; பிறரின் உழைப்பையும் உணர்வையும் மதித்து,அவர்களையும் உயரிய நல் உறவாகக் கருதுவோம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!

news

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!

news

மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

news

மகளே நிறைவேற்றுவாயா?

news

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

அதிகம் பார்க்கும் செய்திகள்