- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
ஐயிரண்டு திங்களிலே
மடி சுமந்து நான்பெற்ற மகளே!
ஆசையும் எனக்குள்ளே அளவற்றிருக்குதடி..
கண்ணுக்குள் பொத்தி வச்சேன் ...
கனவுகளோடு வளர்த்து வச்சேன்....
கண்மணியே நீயும் தான்
சைரன் வெச்ச காருல பவனி வர வேண்டுமடி ...
ஊரெல்லாம் உனக்கண்டு கையெடுத்து வணங்குமடி ...
உத்தரவு கேட்டு ஊருசனம் நிக்குமடி...
ஒத்த வார்த்தை நீ சொன்னா
ஊரு நலம் கூடுமடி...

முத்தே என் ரத்தினமே....
கல்வி ஒன்னுதான் சொத்துன்னு எண்ணு ...
கருத்தா படிச்சு
கலெக்டரா ஆகிவிடு ...
உன்னால ஊரும் தான் உயர்ந்திட வேண்டுமடி ...
இப்படியோர் பிள்ளை பெற்ற மகராசின்னு
ஊரும் தான் என்னைப் பாராட்ட வேண்டுமடி ...
நான் கண்ட கனவை நிறைவேற்றுவாயா ?
நாலு திசையும் போற்ற வாழுவாயா?
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
மகளே நிறைவேற்றுவாயா?
அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"
சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?
{{comments.comment}}