காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

Sep 09, 2026,02:42 PM IST

தேவகோட்டை: தமிழக அரசின் காலை உணவுத் திட்டம், செப்டம்பர் 17 முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்  முன்னாள் முதல்வர் காமராஜர் காலை உணவு திட்டம் என விரிவுபடுத்தப்பட உள்ளது. 


இதையொட்டி, தேவகோட்டை நகராட்சி சார்பில் சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளிக்கு காலை உணவுத் திட்டத்துக்குத் தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டன.


நகராட்சி சுகாதார பணி மேற்பார்வையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும்  பணியாளர்கள்  வள்ளி மற்றும் செல்லம்மாள் ஆகியோர் தளவாடப் பொருட்களை பள்ளித் தலைமையாசிரியர் சொக்கலிங்கத்திடம் வழங்கினர்.




திட்டத்திற்கான பெயர் பலகை நாளை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்திற்குத் தற்போது பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். விரைவில் திட்டத்தின் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மாமன் கூட நடந்து பாரு மகிழ்வுடனே தொடர்ந்து பாரு!

news

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்

news

மகளே நிறைவேற்றுவாயா?

news

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

news

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்