டில்லி : ஆதார் எண் இருந்தால் மட்டுமே ரயில் டிக்கெட், குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற புதிய ரூல்ஸ் ஜூலை 01ம் தேதியான நாளை முதல் அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது.
இந்திய ரயில்வேயின் அறிவிப்பின் படி, ரயில் டிக்கெட் எடுப்பதற்கு இனி ஆதார் எண் கட்டாயம். கவுன்ட்டரில் நேரில் சென்று எடுப்பதாக இருந்தாலும், ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வதாக இருந்தாலும் அதற்கு ஆதார் எண் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு முறையை ஏஜன்ட்கள் பலரும் தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக ரயில்வே நிர்வாகம் இந்த புதிய முறையை கொண்டு வந்துள்ளது. இது ஜூலை 01 முதல் அமலுக்கு வர உள்ளது.

ஐஆர்சிடிசி அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குள் Login செய்து, உங்களின் அக்கவுண்ட்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். ஐஆர்சிடிசி ஆப் வைத்திருந்தால் உள்ளே சென்று, Account ஆப்ஷனில் சென்று, authentic user என்பதை கிளிக் செய்து அதில் கேட்கப்படும் விபரங்களையும், உங்களின் ஆதார் எண்ணையும் கொடுத்து, உங்களின் ஆதார் எண்ணை ஐஆர்சிடிசி கணக்குடன் இணைக்க வேண்டும். இப்படி இணைத்திருந்தால் மட்டுமே ஜூலை 01ம் தேதியான நாளை முதல் ஆன்லைனில் உங்களால் டிக்கெட் முன்பதிவு, தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றை செய்ய முடியும்.
ஆதார் எண்ணுடன் இணைக்காத அல்லது ஆதார் எண் இல்லாதவர்களால் இனி ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. அதனால் நீங்கள் இதுவரை ஆதார் எண்ணை இணைக்காமல் இருந்தால் இப்போதே இணைத்து விடுங்கள்.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}