ஆடிப்பெருக்கு 2024 : ஆற்றங்கரைகளில் விழாக்கோலம்.. இதையெல்லாம் மறக்காம வாங்கிடுங்க.. செல்வம் பெருகும்

Aug 03, 2024,12:53 PM IST

சென்னை :   ஆடி மாதத்தின் மிக முக்கியமான விஷேச நாட்களில் ஒன்று ஆடிப்பெருக்கு. ஆடி 18, ஆடிப்பெருக்கு, ஆடி 18ம் பெருக்கு, ஆடி நோம்பி என பலவிதமான பெயர்களில் அழைக்கப்படும் இந்த நாள் பெருக்கத்திற்குரிய நாளாக கருதப்படுகிறது. தமிழகத்தில் மட்டுமே கொண்டாடப்படும் மிகச் சிறப்பான விழாவும் இது தான்.


ஆடிப் பெருக்கையொட்டி தமிழ்நாடு முழுவதும் மக்கள் கோலாகலமாக இதை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக காவிரி உள்ளிட்ட ஆற்றங்கரை நகரங்களில் இது விமரிசையாக கொண்டாடப்படுகிறது.


கோடையில் வறண்டு போய் இருந்த ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் பெய்த மழை நீர் ஒன்று சேர்ந்து, ஆடி 18ம் நாளில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கக் கூடிய இந்த நீரை சேமித்து, விவசாய பணிகளை ஆடி மாதத்தில் துவங்கும் விவசாயிகள், தை மாதத்தில் அறுவடை செய்வது வழக்கம். மண்ணையும், உலகத்தில் உள்ளவர்களின் வாழ்வையும் செழிக்க வைக்கும் நீரை தாயாக, தெய்வமாக பாவித்து வழிபடும் உன்னதமான நாளே ஆடிப்பெருக்கு நாளாகும். 




மகாபாரதத்தில் குருஷேத்திர போர் ஆடி முதல் நாளில் தான் துவங்கியதாக சொல்லப்படுகிறது. மகாபாரத போர் மொத்தம் 18 நாட்கள் நடைபெற்றது. இதில் 18வது நாளில் கெளரவ படைகள் அனைத்தும் அழிந்து, அதர்மம் அழிந்து, தர்மம் நிலை நாட்டப்பட்டது. இந்த நாளையே நாம் ஆடிப் பெருக்கு தினமாக கொண்டாடுகிறோம் என்றும் ஆடிப்பெருக்கு விழா குறித்து புராணங்களில் சொல்லப்படுகிறது.


பொதுவாக ஆடி மாதத்தில் நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைவனை போய் சேரும் என்பது ஐதீகம். நாம் செய்யம் செயல்களை ஏற்றுக் கொண்டு, அதன் பலன்களை இரு மடங்காக திருப்பி தரும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கன்று வழிபட்டால் நீர்நிலைகள் பொங்கி வந்து மண் செழிப்பதை போல் நம்முடைய வாழ்க்கையும் செழிக்கும் என்பது நம்பிக்கை. இதனால் இந்த நாளில் மக்கள் ஆறு, குளக்கரைகளுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம்.


குறிப்பாக ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி கரையில் காவிரி அன்னையை தனது சகோதரியாக பாவித்து ரங்கநாதர் சீர் கொடுக்கும் வைபவம் நடக்கும். யானை மீது புடவை, வளையல், மஞ்சள், குங்குமம், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் சீர் வரிசையாக எடுத்து வரப்பட்டு, அதை ஆற்றில் விடுவார்கள். அன்று நாள் முழுவதும் பெருமாள் காவிரிக்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்வார்.


திருச்சியை போல் நெல்லையில் தாமிரபரணி கரை, ஈரோடு உள்ளிட்ட கூடுதுறை உள்ள இடங்களில் மக்கள் புனித நீராடி வழிபடுவார்கள். ஆடிப்பெருக்க நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் காவிரி அன்னை எழுந்தருள்வதாகவும், அனைத்து தெய்வங்களின் சக்தியையும் தான் பெற்று, அதை மக்களுக்கு அவள் வழங்குவதாகவும் ஐதீகம். ஆடிப்பெருக்கு பெருக்கத்தை தரக் கூடிய நாள் என்பதால் திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள், ஆரோக்கியம் பெருக வேண்டும் என வேண்டிக் கொண்டு தாலிக்கயிறு மாற்றிக் கொள்வார்கள். புதிதாக திருமணமான பெண்களுக்கு தாலி பிரித்து கோர்க்கும் வைபவமும் நடத்தப்படும்.




பொதுவாக ஆடி மாதத்தில் சுப காரியங்கள் எதையும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஆடிப்பெருக்கில் செய்யும் காரியம் பல மடங்காக பெருகும் என்பதால் இந்த நாளில் புதிய தொழில், வியாபாரம் துவங்குவது, சுப காரிய பேச்சுக்கள் நடத்துவது, தங்கம் போன்ற மங்கல பொருட்கள் வாங்குவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆடிப்பெருக்கு அன்று புதிய வீடு, வாகனம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதும் வழக்கம். ஆனால் அனைவராலும் தங்கம், வீடு, கார் வாங்க முடியாது. அப்படிப்பட்டவர்கள் தங்கத்திற்கு இணையான பொருட்களை வாங்கி வீட்டில் வைக்கலாம்.


ஆடிப் பெருக்க நாளில் மஞ்சள் கிழங்கு, கல் உப்பு, ஜவ்வரிசி, பச்சரிசி, மஞ்சள் நிற மலர்கள் போன்ற மங்கல பொருட்களை வாங்கி வீட்டில் வைக்கலாம். அதே போல் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, பருப்பு, புளி, எண்ணெய் போன்ற பொருட்கள் குறையாமல் இருக்கும் படி வாங்கி நிரப்பி வைக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்