சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்துள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டம் குறித்து விரிவான பேட்டியளித்துள்ளார்.
கூட்டணி குறித்துப் பேசிய டிடிவி தினகரன், "நான் இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு முழு மனதோடு வந்திருக்கிறேன். கடந்த காலங்களில் எங்களுக்குள் இருந்த கசப்பான சம்பவங்களையும், எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் முழுமையாகத் தூக்கி எறிந்துவிட்டு, ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளோம்," என்று தெரிவித்தார்.மேலும், தங்களுக்குள் இருந்த 'பங்காளிச் சண்டைகளை' ஓரம் வைத்து விட்டு, தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவதில் அமமுக ஒரு முக்கியத் தூணாகச் செயல்படும் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்குக் கிடைக்காமல் போன வெற்றியை இந்த முறை ஈடுகட்டப் போவதாக உறுதிபடக் கூறினார்."2021-ஆம் ஆண்டு அமைக்கத் தவறிய மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியை, இந்த முறை நாம் அனைவரும் இணைந்து அமைத்தே தீருவோம். அதற்கான உறுதுணையாக அமமுக இருக்கும்."
இந்தக் கூட்டணியின் மூலம் தமிழகத்தில் ஒரு வலுவான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். குறிப்பாக, கடந்த காலப் பிணக்குகளை மறந்து, ஒரு இலக்கை நோக்கிப் பயணிப்பதே தற்போதைய அவசியம் என்பதை அவர் தனது பேட்டியின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் முன்னிலையில் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்ததுடன், செய்தியாளர்களையும் சந்தித்துள்ளார்.
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
பக்தர்களே தயராகுங்கள்! பழனி தைப்பூசத் திருவிழா ஜனவரி 26-ல் தொடக்கம்!
விஜய் பிரச்சாரத்தை எப்படி திட்டமிடலாம்.. தவெக தேர்தல் பிரசாரக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று!
ஓபிஎஸ் அணி உடைந்தது.. ஒரத்தநாடு வைத்திலிங்கம்.. திமுகவில் இணைந்தார்!
வாங்க உங்களுக்குப் பிடித்தவர்களை அரவணைக்கலாம்.. இன்று தேசிய கட்டிப்பிடிப்பு தினம்!
ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}