கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் இன்று கோலகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பர நடராஜர் கோயில் பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயில் உலக பிரசித்த பெற்றதாகும், இந்த கோவிலில் ஆனி திருமஞ்சன விழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 100 டன் எடை, 74 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரில் நடராஜ பெருமாள் எழுத்தருளி காட்சி தந்தார். இந்த தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் நமச்சிவாய என பக்தி முழக்கமிட்டபடியே தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தில் திருதேர் அசைந்தாடி வந்தது. தேரோட்டத்தின் போது, பக்தர்கள், சிவனடியார்கள் சிவ வாத்தியங்களை முழங்கிய படி சென்றனர். தனித்தனியே அலங்கரிக்கப்பட்ட தேர்களில் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய 5 சாமிகள் தனித்தனியாக தேர்களில் எழுந்தருளினார்கள். சிதம்பரம் கீழவீதியில் துவங்கி 4 மாட வீதிகளையும் தேர் வலம் வந்தது. பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நான்கு வீதிகளையும் தேர் வலம் வந்த பிறது இரவு நிலைக்கு வரும். அதன்பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், நாளை காலை பல்வேறு பூஜைகள், ஆராதனை, அர்ச்சனைகள் நடைபெற்ற பிறகு மதியத்திற்கு மேல் ஆனி திருமஞ்சன திருவிழா நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளான சனிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}