"தேசியக் கட்சி" அந்தஸ்து.. ஆம் ஆத்மி "அட்மிட்" .. சிபிஐ, திரினமூல் டிஸ்சார்ஜ்!

Apr 11, 2023,09:37 AM IST
டெல்லி: ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அந்தஸ்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. அதேசமயம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திரினமூல் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் தேசிய கட்சி அந்தஸ்து பறி போய் விட்டது.

சமீப காலமாக பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மமதா பானர்ஜியின் திரினமூல் காங்கிரஸ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தேசியக் கட்சி அந்தஸ்து பறி போயுள்ளது.



கடந்த வாரம்தான் கர்நாடக உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில், ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அந்தஸ்து வழங்கப்படுவது தொடர்பாக உரிய முடிவை ஏப்ரல் 13ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று தனது முடிவை அறிவித்தது தேர்தல் ஆணையம்.

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்திருப்பதை அந்தக் கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், குறுகிய காலத்தில் இப்படி ஒரு சிறப்பு கிடைத்திருக்கிறது. இது நிச்சயம் அற்புதம்தான். கோடானு கோடி மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.  எங்களிடமிருந்து மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.  மிகப் பெரிய பொறுப்பு இப்போது வந்துள்ளது. கடவுளே அதை நிறைவேற்றத் தேவையான ஆசிர்வாதத்தை எங்களுக்கு வழங்கு என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.

ஒரு கட்சியானது, 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாக இருக்க வேண்டும். அதன் வேட்பாளர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் லோக்சபா தேர்தல் அல்லது சட்டசபைத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளுக்குக் குறையாமல் பெற்றிருக்க வேண்டும். அக்கட்சிக்கு நான்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பிக்கள் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் அக்கட்சிக்கு தேசியக் கட்சி அந்தஸ்து கிடைக்கும்.

ஆம் ஆத்மி கட்சியானது டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் மிகப் பெரிய மெஜாரிட்டியுடன் ஆட்சியில் உள்ளது.  கோவா சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்கு 6.77 சதவீத வாக்குகள் கிடைத்தன. குஜராத் சட்டசபைத் தேர்தலில் அக்கட்சிக்கு 5 எம்எல்ஏக்களும் கிடைத்தனர். இதன் காரணமாக அக்கட்சிக்கு தற்போது தேசியக் கட்சி அந்தஸ்து கிடைத்துள்ளது.

புதுச்சேரி பாமக அந்தஸ்து பறி போனது

இதற்கிடையே, புதுச்சேரி பாமக, ராஷ்டிரிய லோக்தளம், பாரத ராஷ்டிர சமிதி, மக்கள் ஜனநாயகக் கூட்டணி,  புரட்சிகர சோசலிச கட்சி, மிஸோரம் மக்கள் மாநாட்டுக் கட்சி ஆகியவற்றுக்கு மாநிலக் கட்சி அந்தஸ்து பறி போயுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வருடன் பேச பெங்களூர் செல்கிறார் முதல்வர் விஜய்

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சிங்காரத்தேனே தென்மதுர மானே !

news

நாங்கள் பிறந்தது யார் செய்த குற்றம்?

news

பாறையும் செடியும்!

news

கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்