ஆடி போயிருச்சு ஆவணி வந்தாச்சு.. டாப்புக்கு வந்துருவோம் மக்களே.. நம்பிக்கையோடு செயல்படுங்க!

Aug 18, 2025,01:59 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மாதங்களின் அரசன் என்று கூறப்படுவது ஆவணி மாதம். அதன் சிறப்புகளைப் பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.


விசுவாசு வருடம் 20 25 ஆகஸ்ட் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆவணி ஒன்றாம் நாள் மாதங்களின் அரசனான ஆவணி மாதம் பிறந்துள்ளது. இந்த மாதம் பல சிறப்புகள் மற்றும் பண்டிகைகளை கொண்டுள்ளது. உலக அளவில் உள்ள மக்கள் அனைவரும் மிக விசேஷமாக கொண்டாடப்படும் பண்டிகை ,முழுமுதற் கடவுள் ஆன விக்னேஸ்வரனுக்கு "விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் 11ஆம் தேதி ஆகஸ்ட் 27 ஆம் நாள் புதன்கிழமை அமைந்துள்ளது மிகவும் விசேஷமானது. சித்திரை 1 தமிழர்களுக்கு ஆண்டின் முதல் மாதம் போன்றே மாதங்களின் அரசனான ஆவணி மாதமே கேரளாவில் ஆண்டின் முதல் மாதமாக கருதப்படுகிறது.


சிவபெருமான் நரியை பரிியாக்கிய திருவிளையாடல் நடந்ததாக கூறப்படும் தினம் "ஆவணி மூலம்". ஆடி மாதம் முழுதும் அம்மன் வழிபாட்டிற்கு முக்கியமாக கருதப்படுகிறது ,அது போன்று ஆவணி மாதத்தில் தான் வினைகளைப் போக்கும் விநாயகரை வழிபடும் விநாயகர் சதுர்த்தி, திருமாலின் மிக சிறப்பான அவதாரங்கள் ஆன கண்ணன் ,வாமனர் அவதாரங்கள் அவதரித்தது இந்த ஆவணி என்பதால் இந்த மாதம் அற்புதங்கள் நிறைந்த மாதம் என போற்றப்படுகிறது.




ஆவணி மாதம் ஆனது "சிங்கமாதம் "என்றும் அழைக்கப்படுகிறது. நிறைய திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் இந்த ஆவணி மாதமே. ஆவணி மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கேரளாவிலும் தென் தமிழகம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்களால் வெகு சிறப்பாகவும் விமர்சையாகவும் கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி "ஓணம்" பண்டிகை அனுஷ்டிக்கப்படுகிறது.


ஆவணி மாத அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் "ஓணம் பண்டிகை" கொண்டாடப்படுகிறது. இது கேரளாவின் தீபாவளி; கேரள புத்தாண்டு; கேரளாவின் அறுவடை திருநாள் என பல பெயர்களில்  சிறப்பாக அழைக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் போது கசப்பு சுவை தவிர மற்ற சுவைகளில் 64 வகை உணவு தயார் செய்து விருந்து அளிப்பது சிறப்பு.


ஆவணி மூலம் :ஆவணி மூலத் திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆகும். இந்த விழா 12 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. சொக்கர் மதுரையில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களை நினைவு கூறும் வகையில் இந்த விழா நடத்தப்படும். இதில் பத்து திருவிளையாடல்கள் நடத்தப்படும். ஆவணி மூலத் திருவிழாவின்போது சுந்தரேஸ்வரருக்கு  பட்டாபிஷேகம் நடத்தப்படும்.


மதுரையில் இதன் பின்னர் சுந்தரேஸ்வரர் ஆட்சிதான் 5 மாதங்கள் நடைபெறும். ஆவணி மூல த்தன்று சூரியன் உதயமாகும் போது வெப்பம் அதிகமாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் வெயில் வாட்டும் அதாவது வெயில் அதிகமாக இருக்கும் என்றும் ,மாறாக மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் காலநிலை மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வருடத்தின் காலநிலையை நம் முன்னோர்கள் கணித்தனர்.


இத்தனை பெருமை வாய்ந்தது இந்த ஆவணி மாதம். அனைவருக்கும் ஆவணி மாதம் சிறப்பாக அமையட்டும் .மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

news

8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!

news

தீவிரம் அடைந்து வரும் வடகிழக்கு பருவமழை... முதல்வர் முக ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோனை!

news

பெங்களூரு - ஓசூர் மெட்ரோ இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை: மெட்ரோ நிர்வாகம்

news

மகளிர் இலவசப் பஸ்களை விமர்சிக்காதீங்க.. என்னெல்லாம் நடக்குது தெரியுமா.. கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

news

தீபாவளியன்று குறைந்திருந்த தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு....சவரனுக்கு ரூ.2,080 உயர்வு!

news

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எதிரொலி.. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை!

news

தீபாவளியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

news

உழவர்களுக்கு இந்த தீபாவளி இருளாகத்தான் இருந்தது.. கொல்லாமல் கொல்லுகிறது திமுக அரசு:அன்புமணி

அதிகம் பார்க்கும் செய்திகள்