சென்னை: மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா ரசிகர் மன்ற நிர்வாகிகள் உதவி செய்தனர். அவர்கள் அனைவரையும் அழைத்து சைவ விருந்து வைத்து கெளரவித்துள்ளார் நடிகர் சூர்யா.
மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் செய்த கனமழை போன்றவற்றால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து பொதுமக்கள் செய்வது அறியாது திகைத்து நின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காகவும் பெரிதும் தவித்து வந்தனர். அப்போது, அரசு மற்றும் தன்னார்வலர்கள் தங்களால் முயன்ற உதவிகளைச் செய்து வந்தனர். குறிப்பாக விஜய், சூர்யா, பார்த்திபன், அறந்தாங்கி நிஷா, கேபிஒய் பாலா உள்ளிட்ட பலரும் தங்ளால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தனர்.
இந்நிலையில், தங்கள் உயிரைப் பற்றி கூட கவலைப்படாமல் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் இறங்கி நிவாரண உதவிகளை வழங்கினர் நடிகர் சூர்யாவின் ரசிகர் மன்ற தலைவர்கள். பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி களப்பணியில் ஈடுபட்டனர். அவரது ரசிகர்களின் இச்செயல்களை பாராட்டி அவர்களை அழைத்து நடிகர் சூர்யா விருந்து வைத்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தவர்கள் மற்றும் சமீபத்தில் திருமணம் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் குடும்பத்துடன் அழைத்து விருந்து வைத்துள்ளார் நடிகர் சூர்யா. சூர்யாவின் இச்செயலுக்கு சூர்யாவின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் , சூர்யா அவர்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துள்ளார். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் சூர்யா தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விருந்து வைத்து அசத்தியுள்ளது இச்சம்பவம் ரசிகர்ளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}