சென்னை: 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்குத் திரும்புகிறார் அப்பாஸ். ஜி.வி. பிரகாஷின் 'ஹேப்பி ராஜ்' திரைப்படத்தில் அவர் இணைந்துள்ளார்.
காதல் தேசம் படத்தில் அறிமுகமானவர் அப்பாஸ். அவரது சாக்லேட் பாய் தோற்றம் அவருக்கு அப்போதைய இளசுகள் மத்தியில் பெரிய மவுசைத் தேடிக் கொடுத்தது. தொடர்ந்து படையப்பா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்ட நடிகர் அப்பாஸ், மின்னலே படத்தில் பெரிதாக பேசப்பட்டார். பின்னர் இடையில் திடீரென காணாமல் போனார். ஹார்பிக் விளம்பரத்தில் அவர் நடித்தபோது அட நம்ம அப்பாஸா என்று பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
இந்த நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் வரவுள்ளார். ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார். இந்தப் படத்திற்கு 'ஹேப்பி ராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் லவ்வர் படம் புகழ் ஸ்ரீ கௌரி ப்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் அப்பாஸ் நடிக்கவுள்ளார்.
அறிமுக இயக்குநர் மரியா ராஜா இளஞ்சேசியன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இதற்கு முன் பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் மரியான், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து மற்றும் சோஃபா பாய் ரசூல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இயக்குநர் மரியா இளஞ்சேசியன் இந்தப் படத்திற்கு 'ஹேப்பி ராஜ்' என்று பெயரிட்டதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். "சினிமாவில் மகிழ்ச்சியின் கொண்டாட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற எளிமையான ஆனால் ஆழமான இலக்கில் இருந்து இந்தப் பெயர் வந்தது. இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியிருக்கும் நிலையில், சோகத்திற்கான ஒரு மாற்று மருந்தாக இருக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் உண்மையாகவே உணர்ந்தேன். உண்மையில், படத்தில் 'ஹேப்பி' என்ற வார்த்தையை நீங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முறை கேட்கலாம். இது ஒரு வெறுமையான திரும்பத் திரும்பச் சொல்லல் அல்ல, மாறாக நம்பிக்கையின் ஒரு தாள மந்திரம்," என்று அவர் கூறினார்.
ஜி.வி. பிரகாஷ் தற்போது ஹேப்பி ராஜ் தவிர, செல்வராகவன் இயக்கும் மென்டல் மனதில் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
கொந்தளித்த திருமாவளவன்.. கோபம் திமுக மீதா.. முதல்வர் விஜய் மீதா?.. இது தான் காரணமா?
தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவு: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் இரங்கல்!
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்
"தலஜோ".. சாலமன் பாப்பையா ஐயாவின் மறக்க முடியாத வகுப்பறை நினைவுகள்!
Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!
Vinayagar Chathurthi Special: அழகான அலங்காரம்.. மஞ்சள் பிள்ளையார் செய்வது எப்படி?
சாலை ஓரம் எல்லாம் கற்கண்டு குவியல், ருசிக்க முடியுமோ?
{{comments.comment}}