பொது இடங்களில்.. க.. அஜீத்தே.. இப்படி அநாகரீகமாக இனி கோஷம் போடாதீர்கள்.. நடிகர் அஜீத் கோரிக்கை

Dec 10, 2024,08:28 PM IST

சென்னை: பொது இடங்களில் க.. அஜீத்தே என்று அநாகரீகமாக, மக்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் வகையில் கோஷமிடுவதை நான் விரும்பவில்லை. இனிமேல் இதுபோல செய்யாதீர்கள் என்று நடிகர் அஜீத் கோரிக்கை விடுத்துள்ளார்.


நடிகர்களிலேயே மிக மிக வித்தியாசமானவராக இருக்கிறார் அஜீத். தேவையில்லாத செயல்களில் அவர் ஈடுபடுவதில்லை. திரைத்துறை தொடர்பான எந்த விழாக்களிலும் பங்கேற்பதில்லை. அவரது படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாவே நடந்ததில்லை. காரணம், அஜீத் வருவதில்லை. தனது பட்டப் பெயர்களையும் கூட இனிமேல் அழைக்க வேண்டாம் என்று சமீபத்தில் அறிவுறுத்தியிருந்தார். எனது பெயரில் மட்டுமே தன்னை அழைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். தனது ரசிகர் மன்றங்களையும் கூட சில வருடங்களுக்கு முன்பே கலைத்தும் விட்டார்.


இந்த நிலையில் சமீப காலமாக பொது இடங்களில் கடவுளே அஜீத்தே என்ற கோஷத்தை சிலர் முழங்கி மக்களுக்கு கடும் எரிச்சலூட்டி வருகின்றனர். இவர்கள் அஜீத் ரசிகர்களாக மட்டுமல்லாமல், மற்றவர்களும் கூட இதுபோல கத்துவதை வழக்கமாக்கி வருவதால் மக்களிடையே கடும் எரிச்சல் அதிகரித்து வருகிறது.


விஜய் கட்சி மாநாட்டின்போதும் இப்படிக் கத்தினார்கள். சமீபத்தில் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் நடத்திய கூட்டத்திலும் கத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்ற கேள்வியும் எழுந்தது. இப்போது அந்த அநாகரீக செயலை அஜீத்தே கண்டித்துள்ளார்.




இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: சமீப காலமாக முக்கியமான நிகழ்வுகளில் பொதுவெளியில் அநாகரிகமாக தேவையில்லாமல் எழுப்பப்படும் க... அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலை அடையச் செய்திருக்கிறது.


எனது பெயரை தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.


எனவே பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் அஜீத்.


இனிமேலாவது அஜீத் பெயரை தவறாக பயன்படுத்தாதீங்கப்பா...!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்